Ilayaraaja - கொடி கட்டி பறந்த இசையமைப்பாளர் அவர்.. நீ யார் என கேட்ட இளையராஜா
சென்னை: Bharani on Ilayaraaja (இளையராஜா குறித்து பரணி) பிரபல இசையமைப்பாளர் பரணியை பார்த்து இளையராஜா நீ யார் என கேட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
தமிழ் சினிமா இசை என்றால் எஸ்.எஸ்.வி - ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் உள்ளிட்டவர்களைத்தான் பெரும்பாலும் உடனே தங்களது நினைவுக்கு ரசிகர்கள் கொண்டுவருவார்கள். ஆனால் இவர்கள் தவிர சந்திரபோஸ், சிற்பி உள்ளிட்டோரும் மிகச்சிறந்த இசையை கொடுத்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் பரணி.

யார் இந்த பரணி?: தஞ்சாவூர் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்தவர் பரணி. இசை மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தீவிரமாக முயன்று எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து 1999ஆம் ஆண்டு வெளியான பெரியண்ணா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் இசையமைத்த அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டடித்தன.
ஸ்டைலுனா ஸ்டைலுதான்: குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்ற தம் அடிக்கிற ஸ்டைல பார்த்து பாடல் இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பாடலை விஜய் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான நிலவே நிலவே ச ரி க ம ப த நி பாடு பாடல் ப்யூர் மெலோடி ரகம். பெரியண்ணா படத்தில் ஃபோக், மெலோடி என ஜானர்களில் பாடல்களை கொடுத்ததால் பரணி கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறினர்.
கொடி கட்டி பறந்த பரணி: அதன் பிறகு அவர் இசையமைப்பில் உருவான பார்வை ஒன்றே போதுமே, சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்தன. முக்கியமாக பார்வை ஒன்றே போதுமே படம் அவரது கரியரை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது. அதில் இடம்பெற்ற, திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு, துளி துளியாய், பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும், யே அசைந்தாடும் காற்றுக்கு, காதல் பண்ணாதீங்க, திரும்ப திரும்ப பார்த்து என அதில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.
க்ளிக் ஆகாத பரணி: இப்படி தொடர்ச்சியாக ஹிட் கொடுத்திருந்த பரணி சில படங்களில் சறுக்கினார். அப்படிப்பட்ட சமயத்தில் அவரது தந்தை இறந்துபோனதால் சின்ன பிரேக்கும் எடுத்துவிட்டார். அதற்கு பிறகு அவரால் கம்பேக் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் இன்றுவரை 90களின் ஆகச்சிறந்த இசையமைப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் பரணி.
பரணி பேட்டி: இந்நிலையில் பரணி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "தற்போதைய காலத்து இசையில் சத்தத்தின் தரம் நன்றாக இருக்கிறதே ஒழிய கேட்பதற்கு பெரும்பாலும் இனிமையாக இல்லை. ஆனால் அப்போதெல்லாம் கேட்பதற்கு இனிமையாகவும், மக்கள் மனதை வருடும் வகையிலும் பாடல்கள் வந்தன. அதனால்தான் இன்றுவரை ஆந்தப் பாடல்கள் ரசிக்கப்படுகின்றனர்.

இளையராஜா யார் என்று கேட்டார்: இளையராஜா போல் ஒரு இசையமைப்பாளரை இனி பார்க்க முடியாது. அவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம். அவர் மனிதனின் ஒவ்வொரு உணர்வையும் புரிந்துகொண்டு இசையமைத்தவர். அதனால்தான் அவர் இசைஞானி. ஒரு விழாவில் இளையராஜாவின் அருகில் அமரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவர் என்னை பார்த்து, 'யார் நீ?'என கேட்டார். உடனே நான் இசையமைத்த படங்களை சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டேன். அதற்கு அவரோ, 'ஓ அப்படியா' என்றதோடு மட்டும் நிறுத்திக்கொண்டார்.
தற்கால இசையை கொடுக்க முடியவில்லை: காலத்துக்கு ஏற்றபடித்தான் இசையை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தோற்றுவிடுவோம். இளையராஜாவால்கூட தற்காலத்துக்கு ஏற்றவாறு இசையை கொடுக்க முடியவில்லை. அதேபோல் நானும் கொடுக்க தவறிவிட்டேன். இப்போது அதை உணர்ந்துகொண்டேன். மீண்டும் கம்பேக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











