விஜய்யை அட்டாக் பண்ணி அஜித் போட சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
சென்னை: இயக்குநர் சரண் இயக்கத்தில் அஜித் குமார், பூஜா நடிப்பில் வெளியான அட்டகாசம் படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். கடந்த 2004ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அஜித் குமார் டபுள் ஆக்ஷன் ரோலில் நடித்திருப்பார். அந்த படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் அப்போதே பெரும் சர்ச்சையை கிளப்பினாலும் அதுதொடர்பாக அந்த படத்தின் இசையமைப்பாளரே சமீபத்திய பேட்டியில் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சினிமாவில் நடிகர்களுக்கு மத்தியில் ஆரோக்கியமான போட்டி இருக்கலாம். ஆனால், பொறாமை இருக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால், அப்படி இருப்பதில்லை என்பது தான் நிதர்சனம்.

அந்த காலத்தில் இருந்தே எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவரும் ஏகப்பட்ட போட்டி போட்டு நடித்து வந்த நிலையில், விஜய் - அஜித்தும் அதே போன்ற போட்டி போட்டது குறிப்பிடத்தக்கது.
விஜய் - அஜித் போட்டி: கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்றால் நல்ல படங்களை கொடுப்பது மட்டுமின்றி ரசிகர்கள் சண்டையை எப்போதும் மூட்டி விட்டுக் கொண்டே இருப்பது தான் பெரிய நட்சத்திரமாக மாற உதவும் என்கிற தவறான முன் உதாரணத்தை சில நடிகர்கள் கொண்டுள்ளனர். இணைந்து நடித்தால் இருவருக்கும் பிசினஸ் நடக்காது என்பதால் தான் ராஜாவின் பார்வையிலே படத்துக்கு பிறகு விஜய் - அஜித் இணைந்து நடிக்கவே இல்லை. கடந்த ஆண்டு பொங்கல் வரை துணிவு - வாரிசு ஒரே நாளில் வெளியாகி வசூல் சக்கரவர்த்தி யார் என்கிற போட்டி நடைபெறத்தான் செய்தது.
உனக்கென்ன பாடல்: சரண் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான அட்டகாசம் படத்தின் அறிமுக பாடலான "உனக்கென்ன" பாடலில் அஜித் குமாரை போற்றும் விதமாகவும் அவரது போட்டியாளரை எதிர்க்கும் விதமாகவே பாடல் வரிகள் ஒவ்வொன்றையும் வைரமுத்து உருவாக்கியிருப்பார். அஜித் சொல்லித்தான் அதுபோன்ற வரிகள் அந்த பாடலில் இடம்பெற்றுள்ளது என்பதை ரிவீல் செய்துள்ளார் பரத்வாஜ். "எனக்கொரு எதிரியாய் இருப்பதற்கு உனக்கொரு உனக்கொரு தகுதியில்லை.. நீ என்ன உருகும் பனிமலை, நான் தானே எரிமலை" போன்ற ஹார்ஷ் ஆன வரிகள் எல்லாம் இடம்பெற்றிருக்கும். இப்போ இருக்குற மாதிரி சோஷியல் மீடியா அப்போ இருந்திருந்தா விஜய் ரசிகர்கள் என்னை பொளந்துருப்பாங்க என பரத்வாஜ் பேசியுள்ளார்.
ஏற்றிவிடவோ தந்தையுமில்லை: சினிமாவில் நடிகர் விஜய்யை அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். ஆனால், அஜித் ஒவ்வொரு படத்திலும் என்னை நானே செதுக்கினேன் என்றே சொல்லி வருகிறார். அட்டகாசம் படத்திலும் "ஏற்றிவிடவோ தந்தையுமில்லை" என்கிற வரிகள் விஜய்யை டைரக்ட் அட்டாக் செய்திருக்கும் என்று இசையமைப்பாளர் பரத்வாஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
லியோவுடன் போட்டிப் போட நினைத்து: விக்னேஷ் சிவனை அதிரடியாக ஏகே 62 படத்தில் இருந்து அஜித் குமார் தூக்க காரணமே துணிவு படத்தின் மூலம் வசூல் ரீதியாக விஜய்யை வீழ்த்த முடியாத நிலையில், அடுத்த படத்தில் விஜய்யை விட முந்த வேண்டும் என்பதற்காகத்தான் விடாமுயற்சி படத்தை இயக்குவதில் இருந்து விக்னேஷ் சிவனை விரட்டி விட்டு மகிழ் திருமேனியை கொண்டு வந்தார் என்றும் ஆனால், அந்த படமும் சீக்கிரம் ரெடியாகவில்லை என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பயங்கர செல்ஃபிஷ்: நடிகர் அஜித் குமார் ரசிகர் மன்றத்தை கலைத்தது, தல என கூப்பிடாதீங்க என சொன்னது, பட புரமோஷன்களுக்கு செல்லாமல் தனிமையை தேடி செல்வது என பயங்கர செல்ஃபிஷ்ஷாகவே செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் மீது கடுமையான விமர்சனங்களை சினிமாவில் உள்ளவர்களே வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்போதும், விஜய் பட அறிவிப்பு வந்தால், பட அப்டேட் இல்லை என்றாலும், ஒரு போட்டோவாவது வந்து விட அதுதான் காரணம் என்கின்றனர். இதே போல வேலைகளை அஜித் மட்டும் செய்யவில்லை என்றும் அஜித்துக்கு எதிராக விஜய்யும் செய்திருக்கிறார் என்றும் சில பிரபலங்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











