பத்தல பத்தல பாடலை பியானோவில் டிட்டோவாக வாசித்த திருமூர்த்தி.. நெகிழ்ந்த டிஇமான்!

சென்னை : பத்தல பத்தல பாடலை பியோனோவில் வாசித்த மாற்றுத்திறனாளி திருமூர்த்தியை இசையமைப்பாளர் டி இமான் வெகுவாக பாராட்டி உள்ளார்.

பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தி பாடல்களை பாடி சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார். விஸ்வாசம் திரைப்படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலை பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்த வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் இமான் அவரை அழைத்து பாராட்டி தன் இசையில் வெளியாக "சீறு"திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி இருந்தார்.

திருமூர்த்தி

திருமூர்த்தி

இணையத்தில் பல பாடங்களை பாடி அசத்தி வரும் திரு மூர்த்தி, லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் வரும் பத்தல பத்தல பாடலை பாடி உள்ளார். விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பே கமலஹாசனே எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட்டாகி பட்டிதொட்டி எங்கு தெறிக்கவிட்டது.

பக்கெட்டில் தாளம்

பக்கெட்டில் தாளம்

இந்த படத்தில் வரும் பத்தல பத்தல பாடலை ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் தாளம் போட்டவாறு பாடி அசத்தி இருந்தார் திரு மூர்த்தி. இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானதை அடுத்து திருமூர்த்தியை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டினார். அத்துடன் சிறந்த இசைக் கலைஞராக உருவாக வேண்டும் என்ற திருமூர்த்தியின் கனவை நிறைவேற்ற, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் இசைப்பள்ளியில் அவர் பயிற்சி பெற உதவி செய்தார். அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார்.

இதயத்தால் உணர்ந்தேன்

இதயத்தால் உணர்ந்தேன்

இந்நிலையில், தற்போது திருமூர்த்தி பத்தல பத்தல பாடலை அப்படியே பியானோவில் வாசித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில், உலகில் உள்ள மிக அழகான விஷயங்களை பார்க்கவோ தொடவோ முடியாது, அவற்றை இதயத்தால் உணர வேண்டும்... நன்றி கமலஹாசன் சார். மேலும் என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய அன்புக்கும் கருணைக்கும் இசையமைப்பாளர் டி.இமான் ஐயாக்கு நன்றி என கூறியுள்ளார்.

தொடர்ந்து உயரவும்

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இசையமைப்பாளர் டி இமான், இதை நிலையில் தொடர்ந்து உயரவும், நான் எப்போதும் உன் பின்னால் ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் மனிதனாக இருப்பேன் என பகிர்ந்துள்ளார். திருமூர்த்தியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X