மறுமணத்திற்கு இமான் வைத்த கண்டிஷன்... என்ன இப்படி சொல்லிட்டாரு!
சென்னை : இசையமைப்பாளர் இமான் தொடர்ந்து பல சிறப்பான படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்யும் முடிவை வெளியிட்ட நிலையில், தற்போது தனது மறுமணம் குறித்த முடிவை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் டி இமான்
கோலிவுட்டில் டி இமான் முன்னணி இசையமைப்பாளராக தொடர்ந்து இருந்து வருகிறார். இவரது இசை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது. சமீபத்தில் இவரது இசையில் வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் அனைத்து பாடல்களும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.

இமான் விவாகரத்து
தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி இசையமைத்து வருகிறார் இமான். இதனிடையே சமீபத்தில் தனது மனைவியை இவர் விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் விவாகரத்துக்கள் அதிகரித்துவரும் நிலையில் இவரது விவாகரத்து முடிவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மறுமணம் செய்ய முடிவு
கடந்த 2008ல் இவருக்கு மோனிகா ரிச்சர்ட் என்பவருடன் அரேஞ்ச்ட் மேரேஜ் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் தற்போது விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் மறுமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அரேஞ்ச்ட் மேரேஜ்
முதல் மணம் இவருக்கு வீட்டில் பார்த்து செய்து வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அரேஞ்ட் திருமணமே செய்யவுள்ளதாக இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது தான் மிகவும் சுதந்திரமாக உள்ளதாகவும் ஆனால் தன்னுடைய அடுத்த திருமண முடிவை மிகவும் எச்சரிக்கையுடன் தான் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இமான் கண்டிஷன்
தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவையாகவே அல்லது விவாகரத்து பெற்றவராகவோ மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய குழந்தைகளிடம் அன்பை விதைப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











