ஏட்டிக்கு போட்டி... நாய்களுடன் ஒப்பிட்டு புது ட்வீட்... கடுப்பை ஏற்படுத்திய இமானின் முன்னாள் மனைவி!
சென்னை : இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவி மோனிகா ரிச்சர்டை கடந்த டிசம்பர் மாதத்தில் விவாகரத்து செய்ததாக அறிவித்தார். இதையடுத்து கடந்த வாரத்தில் எமிலி உபால்ட் என்பவரை மறுமணம் செய்துள்ளார்.
இவ்வளவு விரைவில் திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று மோனிகா ரிச்சர்ட் தற்போது கேள்வி எழுப்பி வருகிறார்.
தன்னுடைய திருமணத்தின்போது இமான், தன்னுடைய 3வது மகள் என்று எமிலியின் மகளை அறிமுகப்படுத்தியிருந்தார்.

இசையமைப்பாளர் டி இமான்
டி இமான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். விஜய்யின் தமிழன் படம் மூலம் துவங்கிய இவரது இசைப்பயணம் தற்போது சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்று நீண்டு வருகிறது.

100 படங்களுக்கு மேல் இசை
100 படங்களுக்கும் மேல் இவர் இசையமைப்பில் வெளியாகியுள்ளன. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து இவர் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதத்தில் தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை விவாகரத்து செய்ததாக அறிவித்திருந்தார்.

இமான் மறுமணம்
இதையடுத்து தற்போது மறைந்த பிரபல கலை இயக்குநர் உபால்டுவின் மகள் எமிலியை கடந்த வாரத்தில் இவர் திருமணம் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றன. அந்த திருமணத்தின்போது எமிலியின் மகளை தனது 3வது மகள் என்று இமான் தெரிவித்திருந்தார்.

மோனிகா கேள்வி
விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து 4 மாதங்களிலேயே இந்த திருமணத்தை இமான் செய்த நிலையில், திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்த மோனிகா ரிச்சர்ட், இந்த திருமணத்திற்கு இவ்வளவு அவசரம் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். தான் தன்னுடைய 12 ஆண்டுகளை அவருடன் வாழ்ந்ததன்மூலம் வீணடித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மோனிகா புதிய ட்வீட்
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய ட்வீட்டில் தங்களது குடும்பத்திற்கு வந்த புதிய உறவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இமானை டேக் செய்து அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவில் தன்னுடைய வீட்டிற்கு புதிய நாய்க்குட்டிகள் வந்துள்ளதாகவும் அவை இனிமேல் தன்னுடைய 3வது மற்றும் 4வது மகள்களாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய மகள்கள்
இமான் தன்னுடைய 3வது குழந்தை குறித்து தன்னுடைய திருமணத்தின்போது மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட நிலையில், தன்னுடைய 3வது மற்றும் 4வது குழந்தைகளாக லியா மற்றும் மியா என்ற நாய்க்குட்டிகளை பற்றி குறிப்பிட்டு மோனிகா பதிவிட்டுள்ளார். இந்த நாய்க்குட்டிகளை வரவேற்பதில் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











