Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் தனுஷின் ராயன் படத்தில் அவருடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். வரும் ஜூன் மாதத்தில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

படம் வடசென்னையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகியுள்ளது. ப பாண்டி படத்தை தொடர்ந்து இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தை தொடர்ந்து உடனடியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கி வருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்திலும் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் இம்மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டாகி வருகிறார்.

Music composer Deva seems to act in SJ Surya character in Raayan movie

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வருகிறார். அவரது படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படங்களாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த கையுடன் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இதனிடையே ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்களை தன்னுடைய இயக்கத்தில் இயக்கியுள்ளார்.

ராயன் படம்: இதில் ராயன் படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வடசென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன், சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா முரளி, துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்கியுள்ளதுடன் கேமியோ ரோலிலும் தனுஷ் நடித்துள்ளார். படத்தில் அவர் கேங்ஸ்டராக நடித்துள்ளதாகவும் அவரது ப்ளாஷ்பேக்கை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எஸ்ஜே சூர்யா கேரக்டரில் தேவா: இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவிற்கு முக்கியமான கேரக்டர் என கூறப்பட்டுள்ளது. இந்தக் கேரக்டரில் வடசென்னை மொழியை பேசி எஸ்ஜே சூர்யா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கேரக்டரில் நடிக்க முன்னதாக இசையமைப்பாளர் தேவாவையே தனுஷ் கேட்டுள்ளார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் இந்தக் கேரக்டரில் நடிக்க முடியாமல் போன நிலையில், எஸ்ஜே சூர்யா இந்த கேரக்டரில் இணைந்து நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் தனுஷின் கனவுப்படமாக உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவனத்தை ஈர்க்கும் தனுஷ்: நடிகர் தனுஷின் அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த ஆண்டிலேயே ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் குபேரா படங்கள் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த ஜனவரியில் தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவான கேப்டன் மில்லர் படம் பொங்கலையொட்டி ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ள நிலையில், அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X