Actor Dhanush: தனுஷுடன் கைகோர்க்கும் தேவிஸ்ரீ பிரசாத்.. அட சூப்பர் காம்போவா இருக்கே!
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் ஓய்வில்லாமல் செயல்பட்டு வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த கேப்டன் மில்லர் படம் கடந்த 12ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளது. சுதந்திர போராட்ட காலகட்டத்தை கதைக்களமாக கொண்டு வெளியான இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சங்களையும் அருண் மாதேஸ்கரன் கவனத்தில் கொண்டு படத்தை உருவாகியுள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தன்னுடைய இயக்கத்தில் படங்களை உருவாக்கி வருகிறார் தனுஷ். முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான டி50 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக தன்னுடைய சொந்த தயாரிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். முற்றிலும் இளைஞர்களை கொண்டு இந்தப் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ். இந்நிலையில் இயக்குநர் சேகர் கம்முலாவுடன் தனுஷ் இணையவுள்ள டி51 படத்தின் சூட்டிங்கும் துவங்கியுள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் கோலிவுட்டின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்கள் என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பொங்கலையொட்டி தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் லீட் கேரக்டர்களில் நடித்து கேப்டன் மில்லர் படம் வெளியானது. இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த நிலையில், சுதந்திர போராட்ட காலத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாகியுள்ளது. விமர்சனரீதியாக மட்டுமில்லாமல் வசூல்ரீதியாகவும் கேப்டன் மில்லர் படம் மாஸ் காட்டி வருகிறது.
அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடக்கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக ஈடுபடுத்தி வருகிறார் தனுஷ். கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த உடனேயே, தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தை முடித்துவிட்டார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து கிடைத்த சிறிய கேப்பில் தன்னுடைய தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் சூட்டிங்கில் பிசியாகிவிட்டார்.
மீண்டும் இயக்குநரான தனுஷ்: குறுகிய கால தயாரிப்பாக முற்றிலும் இளைஞர்களை வைத்து இந்தப் படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். படத்தில் தனுஷ் மற்றும் சரத்குமாரும் முக்கியமான ரோல்களில் நடிக்கின்றனர். இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் சூட்டிங்கையும் நிறைவு செய்துவிட்டு, அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தன்னுடைய டி51 படத்தில் இணையவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ள நிலையில் தற்போது நாகார்ஜூனா சம்பந்தப்பட்ட காட்சிகளை சேகர் கம்முலா படமாக்கி வருகிறார். இதையடுத்து இம்மாதம் 24ம் தேதி இந்தப் படத்தின் சூட்டிங்கில் தனுஷ் இணையவுள்ளதாகவும் அடுத்த மாதம் ராஷ்மிகா மந்தனா ஜாய்ன் ஆகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தனுஷுடன் இணையும் தேவிஸ்ரீ பிரசாத்: இந்நிலையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட்டையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்தின் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். கங்குவா படத்திற்கு இசையமைத்துள்ள தேவிஸ்ரீ பிரசாத் அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் தற்போது தனுஷ் -சேகர் கம்முலா காம்பினேஷன் படத்திலும் அவர் இசையமைக்கவுள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் டி51 படம் உருவாகவுள்ள நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு சிறப்பான தேர்வாக பார்க்கப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











