சூர்யா, ஷோபி மாஸ்டர் எல்லோருமே பாராட்டுனாங்க.. மகிழ்ச்சியை பகிர்ந்த தேவிஸ்ரீ பிரசாத்!

ஐதராபாத் : சென்னையில் பூஜையுடன் துவங்கிய சூர்யா 42 படத்தின் சூட்டிங் தொடர்ந்து கோவாவில் நடைபெற்றது.

இயக்குர் சிவா -சூர்யா கூட்டணியில் துவங்கிய இந்தப் படத்தின் நாயகியாக திஷா பட்டானி இணைந்துள்ளார்.

கோவாவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங் நடந்தநிலையில் இந்த சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

சூர்யா 42 படம்

சூர்யா 42 படம்

சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் சூர்யா 42. இந்தப் படத்தின் பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் போடப்பட்டு சில தினங்கள் சூட்டிங் நடத்தப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது கட்ட சூட்டிங் கோவாவில் நடைபெற்றது. பிரம்மாண்டமான செட் போடப்பட்டு இந்த சூட்டிங் நடத்தப்பட்டது.

கோவாவில் 2வது கட்ட சூட்டிங்

கோவாவில் 2வது கட்ட சூட்டிங்

இதனிடையே இந்த 2வது ஷெட்யூல் நிறைவடைந்து தீபாவளியையொட்டி படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ளது. இதையடுத்து இந்த மாத இறுதியில் படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் நடைபெறவுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு தீபாவளியை அடுத்து வெளியாகும் என்றும் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் நடந்த டூயட் பாடல் சூட்

கோவாவில் நடந்த டூயட் பாடல் சூட்

இந்தப் படத்தில் சிங்கம் படங்களை தொடர்ந்து மீண்டும் தேவிஸ்ரீ பிரசாத் சூர்யாவிற்காக இசையமைத்து வருகிறார். இதனிடையே இந்தப் படத்தின் சூர்யா -திஷா பட்டானி இடம் பெற்ற ஒரு டூயட் பாடல் கோவாவில் படமாக்கப்பட்டுள்ளதாக தேவிஸ்ரீ சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத்தை பாராட்டிய சூர்யா

தேவிஸ்ரீ பிரசாத்தை பாராட்டிய சூர்யா

இந்த சூட்டிங்கை பார்க்க தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால் மற்றொரு சாங்கிற்காக தான் போக முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்ற சாங் சூட்டிங்கை தொடர்ந்து சூர்யா, ஒளிப்பதிவாளர் வெற்றி, நடன இயக்குநர் ஷோபி மாஸ்டர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரும் தனக்கு போன் செய்து பாராட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேவஸ்ரீ பிரசாத் உற்சாகம்

தேவஸ்ரீ பிரசாத் உற்சாகம்

இதனால் தான் மிகவும் உற்சாகமடைந்ததாகவும் கூறியுள்ளார். தனக்கும் சூர்யா சாருக்கும் இந்தப் பாடல் மிகவும் வித்தியாசமாக சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சூர்யா 42 படத்தின் இந்தப் படத்தை சிவா மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X