DSP: வெறித்தனமான ஸ்கிரிப்ட்.. வேற லெவல் ஆக்டிங்.. கங்குவா குறித்து தேவிஸ்ரீ பிரசாத் சிலிர்ப்பு!

ஐதராபாத்: நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் கங்குவா. வரலாற்று பின்னணியில் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். சிங்கம் படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யா -தேவிஸ்ரீ பிரசாத் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர்.

Music composer DSP hails Actor Suryas acting and script work of Siva in Kanguva movie

கங்குவா படத்தில் சூர்யாவின் நடிப்பு வேற லெவல் என புகழ்ந்த டிஎஸ்பி: நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரது படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். ஒரு படத்தின் சாயல் மற்ற படத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். அந்த வகையில் அவரது சூரரைப் போற்று படம் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதுகளை அள்ளியது. தொடர்ந்து ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் போன்ற படங்களையும் வெற்றிப்படமாக்கினார் சூர்யா. ஒவ்வொரு படத்திலும் தான் ஏற்கும் கேரக்டர்களுக்காக அதிகமாக மெனக்கெடல்களை மேற்கொண்டு வருகிறார் சூர்யா.

தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் கோவாவில் துவங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சென்னை, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் விரைவில் படத்தின் அடுத்த ஷெட்யூலுக்காக வெளிநாடு செல்லவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தில் சூர்யாவிற்கு பாலிவுட் நடிகை திஷா பதானி ஜோடியாகியுள்ளார். படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படத்தின் சூட்டிங்கை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க டீம் திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார் தேவிஸ்ரீ பிரசாத். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவாவில் நடைபெற்ற சூட்டிங்கில் சூர்யா, திஷா பதானி பங்கேற்ற நிலையில், அவர்கள் இருவரும் இணைந்த பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்தப் பாடல் மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும் இதையொட்டி தேவிஸ்ரீ பிரசாத்திற்கு பரிசுகள் கொடுத்து அவரை சூர்யா உற்சாகப்படுத்தியதாகவும் டிஎஸ்பி தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மிகவும் ஸ்டைலிஷ்ஷாக இந்தப் பாடல் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புஷ்பா படத்தின் இசையமைப்பிற்காக தேவிஸ்ரீ பிரசாத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதையடுத்து சூர்யா தனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தனக்கு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். கங்குவா படத்தின் ரிலீசை தான் மிகவும் எதிர்பார்ப்பதாகவும், இந்தப் படம் சினிமா லவ்வர்சுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் பல்வேறு முயற்சிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் சில காட்சிகளை தான் பார்த்ததாகவும் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் கூறியுள்ளா டிஎஸ்பி, சூர்யா ஒரு கேரக்டரை எடுத்துக் கொண்டால், அதை சிறப்பாக்க எந்தளவிற்கு செல்வார் என்று அனைவரும் அறிந்ததுதான் என்றும் கூறியுள்ளார். சிறுத்தை சிவாவின் வெறித்தனமான ஸ்கிரிப்டில் சூர்யாவின் வேற லெவல் ஆக்டிங்கில் படம் உருவாகியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப் படம் தன்னுடைய கேரியரிலும் மைல்கல்லாக அமையும் என்றும் தனது பேட்டியில் உற்சாகத்தை தேவிஸ்ரீ பிரசாத் பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X