twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீன செயலிகளை புறக்கணிப்போம்.. இசையமைப்பாளர் ஜிப்ரானின் அதிரடி முடிவு.. டிக்டாக், ஹலோவுக்கு வேட்டு!

    |

    சென்னை: சீன பொருட்கள் மற்றும் சீன செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்து வந்த நிலையில், இசையமைப்பாளர் ஜிப்ரான் டிக்டாக் மற்றும் ஹலோ ஆப்பில் இருந்து வெளியேறியுள்ளார்.

    இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை காரணமாக மோதல் வெடித்து வருகிறது. சமீபத்தில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய ராணுவ வீரர்களை அத்துமீறி சீன வீரர்கள் தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இந்திய வீரர்களின் பதில் தாக்குதலில் 35 சீன வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    சுஷாந்துடன் சண்டை போட்டது நிஜம்தான்.. 9 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய ரியா!சுஷாந்துடன் சண்டை போட்டது நிஜம்தான்.. 9 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய ரியா!

    புறக்கணியுங்க

    புறக்கணியுங்க

    இந்தியா - சீனா இடையே வலுத்து வரும் எல்லை பிரச்சனைக்கு இந்தியர்கள் நினைத்தால் தீர்வு காண முடியும் என்றும், பொருளாதார ரீதியாக சீனாவுக்கு பாதிப்பை விளைவிக்க, நாடு முழுவதும் சீன பொருட்களையும், சீனா செயலிகளான டிக்டாக், ஹலோ, ஷேர் சாட், பப்ஜி உள்ளிட்ட ஆப்களை புறக்கணியுங்கள் என்ற கோஷங்கள் எழுந்து வருகின்றன.

    சோனம் வாங்குடு

    சோனம் வாங்குடு

    3 இடியட்ஸ் படத்திற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த சோனம் வாங்குடுவும் அண்மையில், நாள் தோறும் நம்மிடம் இருந்து செயலிகள் மூலம் சீன நிறுவனங்கள் சம்பாதித்து வருவது பற்றியும், பொருளாதார ரீதியாக சீனாவுக்கு பலத்த அடி கொடுக்க, டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை ஒட்டுமொத்த இந்தியர்களும் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    நான் செஞ்சிட்டேன்.. நீங்க

    நான் செஞ்சிட்டேன்.. நீங்க

    பல பிரபலங்களும் டிக்டாக் செயலியை புறக்கணிக்க தொடங்கி உள்ள நிலையில், இசையமைப்பாளர் ஜிப்ரான், தான் டிக்டாக் மற்றும் ஹலோ செயலிகளை புறக்கணித்து அதில் வைத்திருந்த தனது அதிகாரப்பூர்வ கணக்குகளை அழித்து விட்டதாக அறிவித்துள்ளார். மேலும், நீங்கள் எப்போது அதை செய்யப் போறீங்க என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

    அது மட்டும் போதுமா?

    அது மட்டும் போதுமா?

    அவரது தேசப் பற்றை பார்த்த அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சில நெட்டிசன்கள், உங்கள் மொபைலில் உள்ள பல சீன உபகரணங்களையும் கழட்டி எறிய முடியுமா? இது முட்டாள்த்தனமான முடிவு என்றும், இதனால் சீனா பாதிக்காது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Popular music composer Ghibran deleted his TikTok and Hello app accounts which are belongs to the leading Chinese companies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X