அவரை மாதிரி எனக்கு ஹாண்டில் பண்ண தெரியாது.. மவுனம் கலைத்த இசையமைப்பாளர் ஜிப்ரான்!

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்கள், நடிகர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மாஸான இசையை கொடுத்திருந்தார். தொடர்ந்து தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

தொடர்ந்து தளபதி 69 படத்திற்கும் அவர் இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டில் வெளியான பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜவான் படத்திற்கும் சிறப்பான இசையை கொடுத்திருந்தார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் செயலாற்றி வருவது, மிகச்சிறப்பான இசையை கொடுத்து வருவது மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது.

anirudh gibran thalapathy 69 movie

இசையமைப்பாளர் அனிருத்: இசையமைப்பாளர் அனிருத் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். கடந்த 2012ம் ஆண்டில் இவருடைய பயணம் தனுஷின் 3 படத்திலிருந்து துவங்கியது. வெளிநாட்டிற்கு இவரை படிப்பிற்காக பேக்கப் செய்ய பெற்றோர் யோசித்துவந்த நிலையில், அங்கு போய், அனிருத்தை இசையமைப்பாளராக்க தனுஷ்தான் சிபாரிசு செய்ததாக முன்னதாக பேட்டியொன்றில் அனிருத் கூறியுள்ளார். திரைத்துறையில் தனுஷின் தேர்வு எப்போதுமே சோடை போகாது என்பதற்கு இவரும் ஒரு உதாரணம். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் மட்டுமே இணைவேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் அனிருத்.

முன்னணி நடிகர்களுடன் கூட்டணி: 3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி என ரசிகர்களை ஆட்டம் போட வைத்த அனிருத், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஆட்டம் போட வைத்து வருகிறார். கடந்த ஆண்டில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் என அடுத்தடுத்த படங்களில் இவரது இசை தாறுமாறாக அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கும் இசையமைத்து வருகிறார். விஜய்யின் கடைசி படமாக உருவாகிவரும் தளபதி 69 படத்திற்கும் இவர்தான் இசை. வி6ஜய்யின் முந்தைய படமான கோட் படத்தின் யுவன்சங்கர் ராஜா இசை கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் மீண்டும் விஜய்யுடன் அனிருத் கூட்டணி அமைத்துள்ளார்.

அனிருத்துக்கு ஜிப்ரான் பாராட்டு: இந்நிலையில் அனிருத்தின் இசையமைப்பு குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் தற்போது பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் எப்படித்தான் இத்தகைய பிரஷர்களை அடுத்தடுத்து மெயின்டெயின் செய்கிறாரோ என்று தன்னுடைய வியப்பையும் பதிவு செய்துள்ளார். விஜய் -ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகிவரும் தளபதி 69 படத்தில் அனிருத்தான் இசை என்று தெரியவந்தபோது தான் ஆசுவாசமடைந்ததாகவும் சரியான இடத்தில்தான் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டதாக நிம்மதி அடைந்ததாகவும் ஜிப்ரான் தெரிவித்துள்ளார். ஏனென்றால் தன்னால் அத்தகைய பிரஷரை ஹேண்டில் செய்ய முடியாது என்றும் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்களின் படங்களின் பிரஷர்: விஜய்யின் கடைசி படம் என்னும்வகையில் தளபதி 69 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதையும் ஜிப்ரான் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னதாக விஜய்யின் கத்தி, மாஸ்டர், லியோ, பீஸ்ட் படங்களில் விஜய்யுடன் இணைந்து சிறப்பான பாடல்களை கொடுத்துள்ள அனிருத் ஐந்தாவது முறையாக அவரது தளபதி 69 படத்தில் இணையவுள்ளார். முன்னதாக இந்தப் படத்திற்கு ஜிப்ரான் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இசையமைப்பாளராக அடிப்பட்டது. ஆனால் அனிருத்தே இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார். விஜய் -அனிருத் காம்பினேஷனுக்கு ரசிகர்கள் பழகிவிட்டனர் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த கோட் படத்தின் பாடல்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X