Ajith's AK63 movie: ஏகே63ல் இணையும் ஜிவி பிரகாஷ்.. அப்டேட் சொன்ன பிரபலம்!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாகியுள்ளார்.

Music composer GV Prakash going to Join Ajith -Adhik Ravichandrans AK63 movie?

கடந்த மே மாதத்தில் அஜித்தின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது.

அஜித்தின் ஏகே63 படத்தில் இணையும் ஜிவி பிரகாஷ்?: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் ரிலீசாக வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்திருந்தார் இயக்குநர் ஹெச் வினோத். படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து உடனடியாக அஜித்தின் ஏகே62 படம் உருவாகவுள்ளதாகவும் விக்னேஷ் சிவன் படத்தை இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கபட்டது.

படத்தை லைகா தயாரிக்க கமிட்டான நிலையில், இந்தப் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனி படத்தில் கமிட்டானார். இதையடுத்து படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த மே மாதம் அஜித்தின் பிறந்தநாளையொட்டி லைகா அறிவித்தது. இதையடுத்து உடனடியாக சூட்டிங் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப்போனது.

Music composer GV Prakash going to Join Ajith -Adhik Ravichandrans AK63 movie?

இதையடுத்து ஒருவழியாக கடந்த 4ம் தேதி இந்தப் படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் துவங்கியுள்ளது. தொடர்ந்து ஒரேகட்டமாக அங்கு சூட்டிங் நடத்த இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார். இதையொட்டி அஜித் மற்றும் படத்தின் நாயகி த்ரிஷா உள்ளிட்டவர்கள் அஜர்பைஜானில் முகாமிட்டுள்ளனர். அங்கு இஸ்ரேல் பிரச்சினையையொட்டி, படத்தின் சூட்டிங்கை தொடர்வதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே அஜித்தின் அடுத்தப்படம் குறித்து தற்போதே தகவல்கள் வெளியாகி வருகின்றன. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், சமீபத்தில் அஜித்தை சந்தித்து கதையொன்றை சொன்னதாகவும் அஜித்திடம் ஓகே வாங்கியுள்ளதாகவும் ஏகே63 படமாக அந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Music composer GV Prakash going to Join Ajith -Adhik Ravichandrans AK63 movie?

இந்தப் படத்தில் அஜித் தன்னுடைய சம்பளத்தை ஏற்றியுள்ளதாகவும் அவருக்கு 160 கோடிக்கும் மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில், அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் இதுகுறித்து கேட்டப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து பேசியுள்ள சுரேஷ் சந்திரா, ஆரம்ப கட்டத்தில் உள்ள இந்தப் படம் குறித்து தற்போது பேசுவது சரியாக இருக்காது என்றும் உரிய நேரத்தில் தயாரிப்பு தரப்பு படம் குறித்த அறிவிப்பை மேற்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X