Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
சூர்யா41 படம் தாறுமாறா இருக்கும்... படத்துல இணைஞ்சது பத்தி ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி!
சென்னை : நடிகர் சூர்யா -பாலா காம்பினேஷனில் உருவாகவுள்ள படம் சூர்யா 41. நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி 18 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இணைந்துள்ளது. படத்தின் சூட்டிங் சில தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது. படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ்.
சர்ச்சை
பேச்சு
வழக்கில்
மீரா
மிதுனுக்கு
ஜாமின்...
ஆனால்
ஒரு
கன்டிஷன்

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா, சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்தப் படம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

எதற்கும் துணிந்தவன் படம்
பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கமர்ஷியல் அம்சங்களுக்கும் குறைவில்லாமல் இருந்தது. ஆக்ஷன், காமெடி என ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை படம் கொடுத்தது. பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் அடுத்ததாக பாலா இயக்கத்தில் சூர்யா இணைந்துள்ளார்.

வாடிவாசல் டெஸ்ட் சூட்
இதனிடையே வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டும் சமீபத்தில் நடைபெற்றது. இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா 41 படத்தின் சூட்டிங்கில் சூர்யா கலந்துக் கொண்டுள்ளார்.

பாலா படம் குறித்து மகிழ்ச்சி
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். முன்னதாக அவர் பாலாவின் நாச்சியார் படத்தில் நடிகராகவும் அவருடன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இதுகுறித்த அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தீவிரமான கதைக்களம்
இந்தப் படம் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும் அத்தகைய கதைக்களத்தை பாலா கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சூர்யாவிற்கு ஒரு நடிகராக இந்தப் படம் மிகப்பெரிய படமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். படம் தனக்கும் மிகவும் சவாலான படமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான படம்
சிறப்பான கதைக்களங்களில் பணிபுரிந்துவரும் பாலா இயக்கத்தில் பணியாற்ற தான் மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சூர்யாவிற்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் இந்தப் படம் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.