எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன்.. ஜிவி பிரகாஷ் அதிரடி முடிவு!
சென்னை: இசை அசுரன் என்ற பாராட்டுக்களை பெற்றுள்ள ஜிவி பிரகாஷ், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் ஏறக்குறைய 10 படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், கோடி கோடியாக கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன் என்று ஜிவி பிரகாஷ் பேசி உள்ளது இணையத்தில் வைரலாகி உள்ளது.
நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட் வரை ஒரு கலக்கு கலக்கி வருகிறார் ஜிவி பிரகாஷ். இவர் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைத்து நிற்கக்கூட நேரமில்லாமல் படு பிஸியாக இருக்கிறார். இவர் இசையில் பொங்கலையொட்டி தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து சியான் விக்ரமின் படமான தங்கலான் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. அது மட்டுமில்லாமல் விக்ரமன் சியான் 62 படத்திற்கும் ஜிவி பிரகாஷ்தான் இசையமைக்க கமிட்டாகியுள்ளார்.

ஜிவி பிரகாஷ்: பெரிய நடிகர்களே கையில் ஒன்று இரண்டு படங்களை வைத்து இருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ், 4ஜி, ராமனின் மோகனம், ஜானகி மந்திரம், காதலிக்க யாருமில்லை, கிங்ஸ்டன், இடிமுழக்கம், நாக்கு இங்கோ பேருந்தி, டியர், ரெபல், 13, கள்வன் என ஏராளமான படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இதனால் இந்த ஆண்டு இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார் டா செயலி: இந்நிலையில், சென்னையில் சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள 'ஸ்டார் டா' என்ற செயலியின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இதில் பிராண்ட் அம்பாசிடராக ஜிவி பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் பேசிய அவர், குளிர்பான விளம்பரங்கள், சூதாட்ட விளம்பரங்கள் ஆகியவற்றில் கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன். விளையாட்டு சம்பந்தமான விளம்பரங்களில் நடிக்கலாம் என்று பேட்மிட்டன் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருந்தேன். அந்த வகையில் திறமையானவர்களுக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்தி தரும் ஸ்டார் டா செயலியில் இணைந்துள்ளதில் மகிழ்ச்சி.
பெரும் மகிழ்ச்சி: திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி உள்ள தளமாக இந்த செயலி இருக்கும் என எதிர்பார்க்கிறேன். இதன் பிராண்ட் அம்பாசிடராக பொறுப்பேற்று இருப்பதிலும் மகிழ்ச்சி. நிறைய பேரின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்த போகின்ற இந்த தளத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் , நடிகர் ரமேஷ் திலக், நடிகை நிவேதிதா சதீஷ், தொகுப்பாளர் அபிஷேக் ராஜா, நடிகர் ஷ்யாம் குமார், தயாரிப்பாளர் சிவி குமார்,தனஞ்ஜெயன், திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்,


Click it and Unblock the Notifications











