GV Prakash: தனுஷோட Neek பட பாடல்கள் ரொம்ப ப்ரெஷ்ஷாக இருக்கும்.. அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!
சென்னை: ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார் நடிகர் தனுஷ். இதில் ராயன் படம் முழுமையாக உருவாகி வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தனுஷ் முற்றிலும் இளைஞர்களை வைத்து உருவாக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் குறித்தும் அதிகமான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே காணப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் மட்டுமில்லாமல் பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. படத்தின் ஷூட்டிங் 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சியையும் தனுஷ் படம் ஆக்கியுள்ளார். இதனிடையே இந்த படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகி பணியாற்றி வரும் ஜிவி பிரகாஷ் படம் தன்னுடைய இளம் வயதில் வெளியான மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களை போல மிகவும் பிரஷ்ஷான இசையுடன் ரசிகர்களை கவரும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மற்ற மொழிகளிலும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தமிழில் மட்டும் சிறப்பான நடிகராக தன்னை சுருக்கி கொள்ளாமல் அடுத்தடுத்த மொழிகளிலும் மோஸ்ட் வான்டெட் ஹீரோவாக நடை போட்டு வருகிறார் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு தளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் தனுஷ், ப பாண்டி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்ததால் இயக்கத்தை கையில் எடுக்கவில்லை.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்: இந்நிலையில் கடந்த ஜனவரியில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த தனுஷ், கிடைத்த கேப்பில் சும்மா இருக்காமல் ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்து தன்னுடைய இயக்கத்தில் இரு படங்களை இயக்கியுள்ளார். இதில் ராயன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் மே மாதத்திற்கு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ் இன்டர்வியூ: இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க இளைஞர்களை மையமாகக் கொண்ட இந்த கதையில் தனுஷ் மற்றும் சரத்குமாரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங் 70 சதவிகிதம் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றையும் எடுத்து முடித்துள்ளார் தனுஷ். சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வரும் தனுஷ், அந்த படத்தின் ஷூட்டிங்கில் வாரம் முழுவதும் பங்கேற்று வருகிறார். மும்பையில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து வரும் நிலையில் வார இறுதி நாட்களில் சென்னை திரும்பும் தனுஷ், ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்களின் வேலைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
ப்ரெஷ்ஷான பாடல்கள்: இந்நிலையில் தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ் அந்த படம் குறித்து தனது சமீபத்திய பேட்டியில் சுவாரஸ்யங்களை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கு பிரத்தியேகமாக தானே கூடுதல் கவனம் செலுத்தி கம்போஸ் செய்து வருவதாகவும் தனுசுடன் அமர்ந்து இந்த படத்தின் பாடல்கள் குறித்து தான் ஐடியா செய்து அதன்படி பாடல்களை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய இளம் வயதில் தான் கம்போஸ் செய்த மயக்கம் என்ன, ராஜா ராணி உள்ளிட்ட படங்கள் போன்று இந்த படத்தின் பாடல்களும் மிகவும் கொண்டாட்டமாக 2கே கிட்சை கவரும்வகையில் அமையும் என்றும் ஜிவி பிரகாஷ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் தயாரிப்பு: தனுஷ் இயக்கத்தில் மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், அனிகா சுரேந்திரன் என முற்றிலும் இளைஞர் பட்டாளம் நடித்து வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தப்படம் மூலம் முதல் முறையாக தனுஷுடன் இணைந்துள்ள ஜிவி பிரகாஷின் இந்த பேட்டியும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைந்து இந்த ஆண்டிலேயே படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் இந்தப்படத்தை தன்னுடைய வொண்டர்பார் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











