Siren movie: ஜிவி பிரகாஷ் வெளியிட்ட சைரன் பாடல் ரிகர்சல் வீடியோ.. அட உருகி உருகி பாடுறாரே!
சென்னை: நடிகர் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சைரன் படம் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் வரும் பிப்ரவரி 16ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நேற்றைய தினம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ள இந்தப் பாடலில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் உருவாகியுள்ள நிலையில் விரைவில் படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்துவரும் நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அவரது சைரன் படம் வெளியாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ள நிலையில் முன்னதாக வெளியான போஸ்டர்கள் உள்ளிட்டவை வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும் படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா உள்ளிட்ட இரு நாயகிகள் இணைந்துள்ளதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லராகவும் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டும் உருவாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம்ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்றன. கோலிவுட்டில் மினிமம் கேரண்டி ஹீரோவாக வலம்வரும் ஜெயம்ரவியின் அடுத்தடுத்த படங்கள் குறைவான இடைவெளிகளில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகின. இதில் பொன்னியின் செல்வன் 2 படம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. மல்ட்டி ஸ்டாரர் படமாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் டைட்டில் ரோலில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து வெளியான இறைவன் படம் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை கவரவில்லை.
சைரன் படம்: அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் ஜெயம்ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள சைரன் படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நாயகிகளாக நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். அந்த வகையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்றைய தினம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ரிகர்சல் வீடியோ: படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள நிலையில், தாமரை வரிகளில் நேற்று வரை என்ற இந்தப் பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ஜிவி பிரகாஷ் -சித் ஸ்ரீராம் மேஜிக்கில் உருவாகியுள்ள இந்தப் பாடலின் ரிகர்சல் வீடியோவை தற்போது ஜிவி பிரகாஷ் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ரிகர்சலிலும் இருவரும் அதிகமான மெனக்கெடலுடன் பிராக்டீஸ் செய்வதை பார்க்க முடிகிறது. ஒரிஜினலுக்கு முன்னதாக இந்த ரிகர்சல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஒரிஜினலுக்கு சற்றும் குறைவில்லாமல் உள்ளதை பார்க்க முடிகிறது.
பிப்ரவரி 16ல் ரிலீஸ்: இந்தப்படம் இன்னும் சில தினங்களில் ரசிகர்களை கவர தயாராகியுள்ள நிலையில் படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமங்களும் நல்ல விலைக்கு கைமாறியுள்ளது. விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ள ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. முன்னதாக வெளியான படத்தின் டீசர் படத்திற்கு சிறப்பான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்திலேயே படம் ரிலீசாகவிருந்த நிலையில் தற்போது படம் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. படத்தில் ஜெயம்ரவி கைதி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











