twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யிடம் தான் கற்றுக் கொண்ட விஷயம்.. ஜிவி பிரகாஷ் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா!

    |

    சென்னை : நடிகரும் இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் திறமையோடு கோலிவுட்டில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

    இவர் சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையயையும் கொடுத்துவரும் நிலையில் இசை அசுரன் என்று பாராட்டப்படுகிறார்.

    விஜய்யுடன் இவர் இணைந்து இசையமைத்திருந்த தலைவா படத்தின் வாங்கண்ணா பாடல் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது.

    6 மொழிகள்.. 232 படங்கள்.. 4 தேசிய விருதுகள்.. கலையின் நாயகன் கமல்ஹாசனின் 63 ஆண்டுகால திரைப்பயணம்! 6 மொழிகள்.. 232 படங்கள்.. 4 தேசிய விருதுகள்.. கலையின் நாயகன் கமல்ஹாசனின் 63 ஆண்டுகால திரைப்பயணம்!

    இசை அசுரன் ஜிவி பிரகாஷ்

    இசை அசுரன் ஜிவி பிரகாஷ்

    இசை அசுரன் என்ற பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைக்கும் அனைத்துப் படங்களும் பாடல்களுக்காகவும் பின்னணி இசைக்காகவும் சிறப்பான பாராட்டுக்களை பெற்று வருகின்றன. தொடர்ந்து ஹிட் நம்பர்களை கொடுத்து வருகிறார்.

    முன்னணி ஹீரோக்களுக்கு இசை

    முன்னணி ஹீரோக்களுக்கு இசை

    விஜய், ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார். குறிப்பாக விஜய்யின் தலைவா படத்தில் இவர் இசையில் வெளியான வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் ரசிகர்களை தற்போதுவரை தாளம் போட வைக்கும் பாடலாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் மற்ற பாடல்களும் விஜய்க்கு சிறப்பாக அமைந்தது.

    தலைவா படத்தில் ஜிவி பிரகாஷ்

    தலைவா படத்தில் ஜிவி பிரகாஷ்

    சமீபத்தில் இந்தப் படம் தன்னுடைய 9வது ஆண்டு கொண்டாட்டத்தை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி படக்குழுவினர் மட்டுமில்லாமல் ரசிகர்களும் சிறப்பான பல கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். போஸ்டர்கள் தெறித்தன. தொடர்ந்து இந்தப் படம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்தது.

    அமைதியை கற்றுக்கொண்ட ஜிவி பிரகாஷ்

    அமைதியை கற்றுக்கொண்ட ஜிவி பிரகாஷ்

    இதனிடையே இந்தப் படம் மற்றும் விஜய் குறித்த விஷயங்களை சமீபத்திய பேட்டியொன்றில் ஜிவி பிரகாஷ் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில் விஜய்யிடம் இருந்து எப்படி அனைத்து சூழ்நிலைகளிலும் அமைதியாக செயல்படுவது என்பதை தான் கற்றுக் கொண்டதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    விஜய்யின் ஒரேமாதிரியான மனநிலை

    விஜய்யின் ஒரேமாதிரியான மனநிலை

    அவரிடம் அவரது படங்களின் ரிலீஸ் சமயத்தில் அவரது மனநிலை எப்படி இருக்கும் பதட்டமாக உணர்வீர்களாக என்று தான் ஒரு சமயத்தில் கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் விஜய் அப்படியெல்லாம் இல்லை என்றும், அதிகமான படங்களில் நடித்துவிட்டதால் படம் நன்றாக இருந்தால் ஓகே நன்றாக இல்லையென்றாலும் ஓகே என்ற மனநிலை வந்துவிட்டதாக விஜய் கூறியதாகவும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

    பாடம் கற்ற ஜிவி பிரகாஷ்

    பாடம் கற்ற ஜிவி பிரகாஷ்

    இதையடுத்து படத்தின் ரிலீஸ் குறித்த டென்ஷனை மனதிற்கு ஏற்றிக் கொள்ளாமல் அமைதியாக எதிர்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை தான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும் ஜிவி பிரகாஷ்குமார் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வாங்கண்ணா பாடலின் ஐடியா இயக்குநர் ஏஎல் விஜய்யுடையது என்று குறிப்பிட்டுள்ளார்.

     வாங்கண்ணா பாடல்

    வாங்கண்ணா பாடல்

    கோயம்புத்தூர் ஸ்லாங்கை அந்தப் பாடலில் புகுத்தி, அதற்கான லிரிக்சை ஏஎல் விஜய் உருவாக்கியதாகவும், தொடர்ந்து பாடலுக்கான ட்யூனை அமைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து படத்தின் சூட்டிங்கிற்கு முன்பு படக்குழு சந்தித்தபோது, அந்தப் பாடலை தான் பாடியதாகவும் உடனடியாக விஜய் பாராட்டு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    ஜிவி பிரகாஷை பாராட்டிய விஜய்

    ஜிவி பிரகாஷை பாராட்டிய விஜய்

    இந்தப் பாடல் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று விஜய் அந்த ஸ்டேஜிலேயே பாராட்டியதாகவும் ஜிவி பிரகாஷ்குமார் குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஏற்றாற்போல வாங்கண்ணா பாடல் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    English summary
    Music composer GV Prakash hails vijay for his patience in every movement
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X