GV Prakash: வெற்றிமாறனுடன் மிஸ்ஸான கூட்டணி.. ஜிவி பிரகாஷ் வருத்தம்!

சென்னை: பிசியான இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் சிறப்பான நடிகராகவும் வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ்.

பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இசையமைத்துவரும் ஜிவி பிரகாஷ், அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

பேச்சிலர் படத்தை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் அடியே படம் ரிலீசாகியுள்ளது. இதையொட்டி பல பிரமோஷன்களை அவர் செய்து வந்தார்.

Music composer GV Prakash revealed the movie he missed with Director Vetri Maaran

இயக்குநர் வெற்றிமாறனுடன் இணையவிருந்த படம் மிஸ்ஸானது குறித்து ஜிவி பிரகாஷ் வருத்தம்: பிரபல இசையமைப்பாளராக முன்னணி நடிகர்களின் பல படங்களில் தொடர்ந்து இசையமைத்து வருகிறார் ஜிவி பிரகாஷ். கடந்த ஆண்டு சூரரைப் போற்றுப் படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் நடிகராகவும் இவர் சிறப்பான பலவ படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது பேச்சுலர் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் அடியே படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களுக்காக கடந்த சில தினங்களாக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வந்தார் ஜிவி பிரகாஷ். ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்தும் அப்டேட் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ள நிலையில், பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தான் ஒரு படத்தில் கமிட்டானதாகவும் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகவிருந்த இந்தப் படம் நிதி பிரச்சினை காரணமாக நின்று போனதாகவும் ஜிவி பிரகாஷ் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இயக்குநர் வெற்றிமாறன் 3 -4 ஆண்டுகளுக்கு பிசியாக இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள ஜிவி பிரகாஷ், எதிர்காலத்தில் இந்தப் படம் உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.

Music composer GV Prakash revealed the movie he missed with Director Vetri Maaran

வெற்றி மாறனுடன் ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள ஜிவி பிரகாஷ், அடுத்ததாக சூர்யா லீட் கேரக்டரில் நடிக்க உருவாகவுள்ள வாடிவாசல் படத்திலும் இணையவுள்ளார். இவர்களின் கூட்டணி எப்போதுமே ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ள நிலையில், வாடிவாசல் படமும் அந்த வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கலாம்.

தற்போது அடியே படம் ஜிவி பிரகாஷ், கௌரி ஜி கிஷன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது. விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ரொமாண்டிக் படமாக வெளியாகியுள்ளது. காமெடியில் ரசிக்கத்தக்க வகையில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ள நிலையில், திரைக்கதையில் சொதப்பியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X