வணங்கான் படத்துக்கு இசையமைத்துவரும் ஜிவி பிரகாஷ்.. படத்தை பத்தி என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை : நடிகர் சூர்யா தனது 41வது படத்தில் இயக்குநர் பாலாவுடன் இணைந்து நடித்து வந்தார். இந்தப் படத்திற்கு வணங்கான் என்று பெயர் வைக்கப்பட்டது.
18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா -பாலா இணைந்துள்ள இந்த படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியில் 35 நாட்கள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து கோவாவில் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறுத்திவிட்டு சூர்யா 42 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் சூர்யா.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் படத்தின் அடுத்தடுத்த வெற்றியால் மிகுந்த உற்சாகமடைந்துள்ளார். இதில் சமீபத்தில் அவர் சிறிய வேடத்தில் நடித்து வெளியான விக்ரம் படம் அவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளது. இதில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார் சூர்யா.

பாலா இயக்கத்தில் நடித்த சூர்யா
இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் பாலா கூட்டணியில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய 41வது படத்திற்காக இணைந்தார் சூர்யா. பாலா பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் வெளியானது. வணங்கான் என்று படத்திற்கு பெயரிடப்பட்டது. முன்னதாக படத்தின் முதல்கட்ட சூட்டிங் தொடர்ந்து 35 நாட்கள் கன்னியாகுமரியில் எடுத்து முடிக்கப்பட்டது.

சூர்யா 42வில் இணைந்த சூர்யா
படத்தில் மீனவராக சூர்யா நடித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங் கோவாவில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் திடீரென படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சிவா இயக்கத்தில் தன்னுடைய சூர்யா 42 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் சூர்யா.

அடுத்தடுத்த அப்டேட்கள்
இந்தப் படத்தின் அடுத்தடுத் அப்டேட்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வணங்கான் படம் குறித்து அப்டேட் தெரியாமல் சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்து வந்தனர். பாலாவுடன் நந்தா, பிதாமகன் படங்களில் நடித்துள்ளார் சூர்யா. இந்தப் படங்கள் அவருடைய கேரியருக்கு சிறப்பான பலத்தை கொடுத்தவை.

வணங்கான் குறித்து ஜிவி பிரகாஷ்
இந்நிலையில் வணங்கான் படம் குறித்து தற்போது அதன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். வணங்கான் படத்தின் பாடல்கள் கம்போசிங் மும்முரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

வணங்கானில் பாடுவாரா சூர்யா?
முன்னதாக சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் இணைந்திருந்தார் ஜிவி பிரகாஷ்குமார். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சூர்யா ஒரு பாடல் பாடியிருந்தார். இந்தப் படத்திற்காக தேசிய விருதுகளை இந்த டீம் அள்ளியது. இந்நிலையில் தற்போது மீண்டும இந்தக் கூட்டணி இணைந்துள்ள நிலையில், சூர்யா இந்தப் படத்தில் பாடல் பாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











