GV Prakash: அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்.. ஹீரோவா மட்டும் இவ்வளவா?

சென்னை: இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கிய ஜிவி பிரகாஷ், நடிப்பிலும் முன்னணி நடிகராக தன்னை மாற்றியுள்ளார். அவரது நடிப்பிலும் இசையமைப்பிலும் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இசையில் இசை அசுரன் என்ற பாராட்டுக்களை பெற்றுள்ள ஜிவி பிரகாஷ், நடிப்பில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் ஏறக்குறைய 10 படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய படங்களுக்கு தானே இசையமைத்து வருகிறார் ஜிவி பிரகாஷ்.

நடிப்பு, இசையில் மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் தற்போது கவனத்தை செலுத்தி வருகிறார் ஜிவி பிரகாஷ். பாடகராகவும் பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார். இவரது மனைவி சைந்தவியும் பிரபல பாடகியாக அதிகமான ஹிட் நம்பர்களை கொடுத்துள்ளார். தற்போது அதிகமான படங்களுக்கு இசையமைத்துவரும் இசையமைப்பாளர் என்ற பெருமையை ஜிவி பிரகாஷ் பெற்றுள்ளார். இதில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்களே 10க்கும் மேற்பட்டு காணப்படுகின்றன. இந்த ஆண்டில் இவரது நடிப்பு மற்றும் இசையமைப்பில் அதிகமான படங்கள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Music composer GV Prakashs musical line ups revealed

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட் வரை தன்னை நிரூபித்துள்ளவர் ஜிவி பிரகாஷ். அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைத்து நிற்கக்கூட நேரமில்லாமல் செயலாற்றி வருகிறார் ஜிவி பிரகாஷ். பொங்கலையொட்டி கடந்த 12ம் தேதி வெளியான கேப்டன் மில்லர் படத்திற்கும் ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார். இதேபோல சியான் விக்ரமுடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ள தங்கலான் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. விக்ரமன் சியான் 62 படத்திற்கும் ஜிவி பிரகாஷ்தான் இசையமைக்க கமிட்டாகியுள்ளார்.

முன்னணி ஹீரோக்களுடன் கூட்டணி: இதனிடையே ஜிவி பிரகாஷ் இசையில் அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. சூர்யாவின் வாடிவாசல், சூர்யா 43 படங்களுக்கும் ஜிவி பிரகாஷ்தான் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். அருண் விஜய் -பாலா கூட்டணியில் உருவாகியுள்ள வணங்கான் படத்திற்கும் ஜெயம்ரவியின் சைரன் படத்திற்கும் இசையமைத்துள்ளார். அருண் விஜய்யின் மற்றொரு படமான அச்சம் என்பது இல்லையே, வெங்கட் பிரபுவின் பார்ட்டி, சிவகார்த்திகேயனின் எஸ்கே21 போன்ற படங்களிலும் இசையமைத்துள்ளார். துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படத்திற்கும் ஜிவி இசையமைத்து வருகிறார்.

Music composer GV Prakashs musical line ups revealed

பாலிவுட், டோலிவுட்டிலும் படங்கள்: இந்நிலையில் பாலிவுட்டில் உருவாகிவரும் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிலும் கங்கணா ரனாவத்தின் எமர்ஜென்சியிலும் இசையமைத்து வருகிறார். இதனிடையே தெலுங்குப்படமான டூயட், மத்கா, விஎன்ஆர் ட்ரியோ, ஆகிய படங்களுக்கும் ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்து வருகிறார். அவரது இசையமைப்பில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் அடுத்தடுத்து 10 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அவற்றில் 4ஜி, ராமனின் மோகனம், ஜானகி மந்திரம், காதலிக்க யாருமில்லை, கிங்ஸ்டன், இடிமுழக்கம், நாக்கு இங்கோ பேருந்தி, டியர், ரெபல், 13, கள்வன் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்தப் படங்களுக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்துள்ளார்.

ஜிவி தயாரிப்பில் கிங்ஸ்டன்: ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் 25வது படம் கிங்ஸ்டன். இந்தப் படத்தின் சூட்டிங் சில வாரங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது. இந்தப் படத்தினை தன்னுடைய பேரலல் யுனிவர்ஸ் நிறுவனம் மூலம் ஜிவி பிரகாஷ் தயாரிக்கவும் செய்கிறார். இந்தப் படத்தின் சூட்டிங்கை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்த நிலையில், படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாகியுள்ளார். கடல் பின்னணியில் திகில் சாகச படமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கேற்ப இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X