காதலுக்கும் இளையராஜா தான்.. பிரேக்கப்புக்கும் எங்கப்பாதான்.. மேடையில் உருகிய யுவன் சங்கர் ராஜா!
சென்னை: இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளை கடந்து தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் சூப்பராக செயல்பட்டு வருபவர். இவரது பாடல்கள் மற்றும் அதன் அனுபவம் அவருக்கு மட்டுமே சாத்தியம். இப்போதும் நடு இரவு பயணங்களை சுவாரஸ்யமாக்குவது இளையராஜாவின் பாடல்கள்தான்.
இது கார் பயணங்களில் மட்டுமில்லாமல் அரசு பேருந்துகளிலும் சிறப்பாகவே அமைகின்றன. கண்ணை மூடி என்ஜாய் செய்வதற்கு இளையராஜாவின் பாடல்கள்தான் எப்போதுமே பர்ஸ்ட் சாய்ஸ். இளையராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா மட்டுமில்லாமல் அவரது மகள் மறைந்த பவதாரணியும் அவரது இசை வாரிசுகளாகவே காணப்படுகின்றனர்.

இசைஞானி இளையராஜா: இசைஞானி இளையராஜாவின் நீண்ட நெடிய திரைப்பயணம் தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இவரது இசையில் சிறப்பான பல பாடல்கள் தற்போதும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக காணப்படுகின்றன. அந்த வகையில் சினிமா பாடல்களில் மட்டுமில்லாமல் சிம்பொனி உள்ளிட்ட மற்ற முயற்சிகளிலும் தன்னை சிறப்பாகவே இணைத்து வருகிறார் இளையராஜா. இவரது இசை வாரிசுகளாக இவரது மகன்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மட்டுமில்லாமல் மறைந்த இவரது மகள் பவதாரணியும் உள்ளார். இதில் யுவன் சங்கர் ராஜா பிசியான இசையமைப்பாளராக அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து சிறப்பான இசையை கொடுத்து வருகிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா: சமீபத்தில் இவரது இசையில் வெளியான விஜய்யின் கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் ரசிகர்கள் இந்தப்படத்தின் பாடல்களையும் பிஜிஎம்மையும் கொண்டாடினர். இந்நிலையில் அடுத்ததாக பொங்கல் கொண்டாட்டமாக இவரது இசையில் நேசிப்பாயா படம் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள நிலையில் மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்த படம் இன்னும் சில தினங்களில் பொங்கல் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு நேற்றைய தினம் சென்னையில் சிறப்பாக நடந்துள்ளது.
நேசிப்பாயா இசை வெளியீடு: இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றிருருந்தார். பல சுவாரசியங்களை படக்குழுவினரும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் மேடையில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்தப் படத்தின் கதையை கேட்டதிலிருந்து படம் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்று தான் நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். விஷ்ணுவர்தனுக்கும் தனக்கும் மிகப்பெரிய புரிதல் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது ஆங்கர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த யுவன் சங்கர் ராஜா, தன்னுடைய அப்பா இளையராஜாவின் பாடல்கள் குறித்த கேள்விக்கும் பதிலளித்தார்.
அப்பா குறித்து யுவன் நெகிழ்ச்சி: ஹீரோவின் மாஸான அறிமுகப் பாடலாக பொதுவாக என் மனசு தங்கம் பாடலை யுவன் குறிப்பிட்டார். தொடர்ந்து ஹீரோவும் ஹீரோயினும் முதல் முறையாக சந்தித்துக் கொண்டால் அந்த நேரத்தில் தென்றல் வந்து தீண்டும்போது போன்ற பாடல்கள் சிறப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காதல் என்றாலும் காதல் தோல்வி என்றாலும் தன்னுடைய அப்பா தான் என்று யுவன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் காதலை சொல்லும் கொடியிலே மல்லிகைப்பூ அதேபோல பிரேக்கப்பை சொல்லும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்றும் யுவன் குறிப்பிட்டுள்ளார்.
டூயட்டுக்கு இளையராஜாதான்: இதேபோல காதல் டூயட் பாடல்களில் பாஸ்ட் பீட்டாக அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி பாடலும் ஸ்லோ பீட்டில் நான் தேடும் செவ்வந்தி பூவிது பாடலும் யுவன் சங்கர் ராஜாவின் ஃபேவரைட்டாக அமைந்துள்ள பாடலாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாடியும் காட்டியுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மிகவும் ட்ரெண்டியான உடையுடன் அவர் பங்கேற்றது குறித்தும், ஆங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் அவரது கெட்டப் மிகச் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











