அப்பா -அம்மாவிடம் இருந்து எனக்கு கிடைத்தது இதுதான் -ஹாரீஸ் ஜெயராஜ் சொன்னதை பாக்கலாங்களா!
சென்னை : இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் பல சூப்பர்ஹிட் படங்களில் பணிபுரிந்து பல சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார்.
இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் கொண்டாடி வருகிறார்.
மின்னலே திரைப்படத்தில் துவங்கிய ஹாரீஸ் ஜெயராஜின் திரையிசைப் பயணம் தொடர்ந்து ரசிகர்களின் இதயத்தை வருடி வருகிறது.

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ்
இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் தொடர்ந்து சிறப்பான திரையிசை பாடல்களை கொடுத்து வருகிறார். மின்னலே படத்தில் ரசிகர்களை வசீகரித்த இவரது இசைப் பயணம் தொடர்ந்து அவர்களின் இதயத்தை வருடி வருகிறது. பல சிறப்பான படங்களில் பல சிறப்பான பாடல்களை கொடுத்து வருகிறார் ஹாரீஸ். இவரது சிறப்பு என்று கூற வேண்டுமானால் மனதை லேசாக்கும் பாடல்கள்தான்.

மின்னலே படத்தில் துவங்கிய பயணம்
மின்னலே படத்தின்மூலம் சிறப்பான இசையை கொடுத்த ஹாரீஸ் தொடர்ந்து அதே ஆண்டில் மஜ்னு, 12பி என அடுத்தடுத்த படங்கள் மூலம் ரசிகர்களை வசப்படுத்தினார். இவருடைய இசையில் அதிகமாக எலெக்ட்ரானிக் வாத்தியங்களை பயன்படுத்தி அதிரடியான இசையை கொடுத்துள்ளார். இவரது இசையமைப்பில் பல படங்கள் ரசிகர்களை இவரிடத்தில் கட்டிப் போட்டுள்ளன.

சூப்பர்ஹிட் படங்கள்
அந்த வகையில் என்னை அறிந்தால், மின்னலே, சாமுராய், காக்க காக்க, சாமி, வேட்டையாடு விளையாடு, துப்பாக்கி அயன் என பல மெகாஹிட் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் ஹாரீஸ் ஜெயராஜ். இவரது இசைப்பயணம் தொடர்ந்து வரும் நிலையில், இன்றைய தினம் தன்னுடைய 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஹாரீஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்
இதையொட்டி சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள தன்னுடைய தாய் மற்றும் தந்தையிடம் இருந்து தான் பெற்ற விஷயத்தை தெரிவித்துள்ளார். தன்னுடைய தாயிடமிருந்து அன்பையும் தன்னடக்கத்துடன் இருப்பது குறித்து கற்றுக் கொண்டதாகவும் தன்னுடைய தந்தையிடம் இருந்து இசையையும் தான் கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பெற்றோருக்கு நன்றி
இன்றைய தினம் தான் என்னவாக இருக்கிறேனோ அது தன்னுடைய பெற்றோரால் தான் சாத்தியமானது என்றும் இந்த நன்னாளில் தன்னுடைய பெற்றோருக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஹாரீஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தான் 2 வயது குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறுவயது புகைப்படம்
இந்தப் புகைப்படம் குறித்த தகவலையும் ஹாரீஸ் ஜெயராஜ் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் 2 வயது சிறுவனாக ஹாரீஸ் உள்ள நிலையில், இந்தப் புகைப்படம் தனது வீட்டின்முன்பு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது லட்சங்களில் சம்பளம் வாங்கிவரும் ஹாரீஸ் இந்தப் புகைப்படத்தில் ஓலை குடிசை முன்பு காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











