KH233 movie: கமலுடன் மீண்டும் இணையும் ஹாரீஸ் ஜெயராஜ்.. மேஜிக் பாடல்களுக்கு ரெடியா மக்களே!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 AD படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இதில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், கல்கி படத்தின் சூட்டிங்கில் கமல் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய சொந்த தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் இணையவுள்ளார் கமல்ஹாசன்.
மீண்டும் கமலுடன் இணையும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: விக்ரம் படம் கொடுத்த இன்டஸ்ட்ரியல் ஹிட் காரணமாக மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அரசியல்வாதியாகயும் அதிரடி காட்டி வருகிறார். அவரது அடுத்தடுத்த மூவ்களை ரசிகர்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகின்றனர். தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல்.

இந்தப் படத்தின் போஸ்ட் பரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் அடுத்த ஆண்டில் கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து பிரபாசுக்கு வில்லனாக கல்கி 2898 AD படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் கமல். இந்தப் படங்களுக்கு இடையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் அவரை பார்க்க முடிந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த கமிட்மெண்ட்களையடுத்து அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய KH233 படத்தில் நடிக்கவுள்ளார். ராணுவ வீரராக கமல் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலின் கதைக்கு தன்னுடைய திரைக்கதை மூலம் ஹெச் வினோத் உயிர் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் நவம்பர் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முன்னதாக கமலின் வேட்டையாடு விளையாடு படத்திற்கு இசையமைத்திருந்தார் ஹாரிஸ். இந்தப் படத்தில் பார்த்த முதல் நாளில், மஞ்சள் வெயில் என்பது உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் மீண்டும் கமலின் KH233 படத்தில் ஹாரிஸ் இணையவுள்ளது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. மேலும் படத்தில் நடிகர் சிம்புவும் முக்கியமான கேரக்டர் ஒன்றில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலின் தயாரிப்பில் STR48 படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க சிம்பு முன்னதாக கமிட்டாகியுள்ள நிலையில், தற்போது கமலின் KH233 படத்திலும் இணையவுள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











