இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கு ஹேக்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை : கடந்த 2001ம் ஆண்டில் வெளியான மின்னலே படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது இசையில் அடுத்ததாக துருவ நட்சத்திரம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் பக்கம் மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்

தமிழின் பிரபல இசையமைப்பாளர்களில் முன்னிலையில் உள்ளவர் ஹாரிஸ் ஜெயராஜ். 2001ம் ஆண்டில் இவரது மின்னலே படம் வெளியான நிலையில், முதல் படத்திலேயே வசீகரா என்ற பாடலின் மூலம் ரசிகர்களை வசீகரித்தவர் இவர். தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய இசையமைப்பாளராக இவர் மாறினார். தற்போதும் படங்களுக்கு இசையமைத்துவரும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் துருவ நட்சத்திரம் படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது.

 அதிகமான ஹிட் படங்கள்

அதிகமான ஹிட் படங்கள்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என பல படங்களில் இசையமைத்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ், பல விருதுகளையும் குவித்தவர். மின்னலே, சாமுராய், வாரணம் ஆயிரம், சாமி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, கஜினி, ஏழாம் அறிவு, அந்நியன், துப்பாக்கி, என்னை அறிந்தால், பீமா, அயன் என இவரது ஹிட் படங்களின் நீளம் அதிகம். இந்நிலையில் இவரது ட்விட்டர் அக்கவுண்ட் மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய முகநூலில் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

ஹாரிஸ் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக்

ஹாரிஸ் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக்

இதுகுறித்து தன்னுடைய முகநூலில், ஹாய் நண்பர்களே, என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் இரு தினங்களாக ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று ஹாரிஸ் ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார். மேலும் விரைவில் இந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டுவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜின் இந்தப் பதிவு ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தி லெஜண்ட் படத்திற்கு இசை

தி லெஜண்ட் படத்திற்கு இசை

பல மொழிகளில் தன்னுடைய சிறப்பான இசைமூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவருடைய இசை மிகவும் ஸ்டைலிஷ்ஷாக இருக்கும். மேற்கத்திய பாணியிலான இசைப்பிரியர்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் சரியான இசையை கொடுத்து வந்தார். சமீபத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் படத்திற்கும் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றன.

துருவ நட்சத்திரம் படத்தில் இசை

துருவ நட்சத்திரம் படத்தில் இசை

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ள போதிலும் விக்ரம் -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் துருவ நட்சத்திரம் இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படங்களில் அதிக வாய்ப்பில்லையென்ற போதிலும் அதிகமான இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இதன் பல மெட்டுக்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X