Harris Jayaraj: சோகத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.. என்ன இப்படி ஆயிடுச்சு!

சென்னை: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அடுத்தடுத்த மனதிற்கு இனிமையான பாடல்களையும் பிஜிஎம்மையும் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து முன்னணியில் உள்ளார்.

அனல் மேலே பனித்துளியாக இவரது பாடல்கள் ரசிகர்களின் உள்ளங்களை வருடி செல்பவை.

Music composer Harris Jayarajs foreign car damaged because of floods

கௌதம் மேனனின் மின்னலே படம் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே வசீகரா பாடல் மூலம் அனைவரையும் வசீகரித்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கௌதம் மேனனின் மின்னலே படம் மூலம் அறிமுகமானவர். முதல் படத்திலேயே வசீகரா பாடல் மூலம் அனைவரையும் வசீகரித்தவர். இந்தப் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது ஹாரிசிற்கு கிடைத்தது. தொடர்ந்து மஜ்னு, லேசா லேசா, 12பி போன்ற படங்கள் ஹாரிஸ் ரசிகர்களை அதிகமாக கட்டிப்போட காரணங்களாக அமைந்தன. தொடர்ந்து தெலுங்கு, இந்தி மொழிகளிலும் அறிமுகமாகி ரசிகர்களை கட்டிப் போட்டார்.

கௌதம் மேனன் -ஹாரிஸ் கூட்டணி: மீண்டும் கௌதம் மேனன்-ஹாரிஸ் கூட்டணி இணைந்து கமலின் வேட்டையாடு விளையாடு படத்திலும் மேஜிக் செய்திருந்தது. குறிப்பாக மஞ்சள் வெயில் பாடல் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டாக அமைந்தது. மெலடி பாடல்களில் மட்டுமில்லாமல் குத்துப் பாடல்களிலும்தான் கலக்குவேன் என்று ஹாரிஸ் அனேகன் படம் மூலம் நிரூபித்திருந்தார். இந்தப் பாடலில் டங்கா மாரி ஊதாரி பாடலுக்கு தனுஷின் ஆட்டமும் சேர்ந்து வலு சேர்த்தன.

துருவ நட்சத்திரம் படம்: தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகிறார் ஹாரிஸ். தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் மாஸ் காட்டி வருகிறார். நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ள ஹாரிஸ் தன்னுடைய இசைப்பயணத்தை சிறப்பாக தொடர்ந்து வருகிறார். அடுத்ததாக கௌதம் மேனன் -விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் ஹாரிஸ் இசையில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து இசைக்கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் வெளிநாட்டு கார்: இதனிடையே சமீபத்தில் தமிழகத்தை ஆட்டி வைத்த மிக்ஜாம் புயல் ஹாரிஸ் ஜெயராஜிற்கும் மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. லம்போர்கினி என்ற வெளிநாட்டு காரை வாங்கி பயன்படுத்தி வந்தார் ஹாரிஸ். இந்திய அளவில் சிலரிடம் மட்டுமே இந்தக் கார் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தற்போது பெய்த கடுமையான மழை மற்றும் வெள்ளத்தில் இவரது கார், மூழ்கி சேதமடைந்துள்ளது.

திகைப்பில் ஹாரிஸ்: இந்தக் காரை இந்தியாவில் சரி செய்ய முடியாது. வெளிநாட்டிலிருந்து இதற்கான எக்ஸ்பர்ட்களை அழைத்துதான் இந்தக் காரை பழுது பார்க்க முடியும். இதனால் செய்வதறியாமல் திகைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். உடடினயாக காரை சரி செய்ய முடியாத நிலையில், அதற்கான முயற்சிகளை தற்போது முடுக்கி விட்டுள்ளார். சென்னையில் அதிகமான கார்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் பிரச்சினை வேறு விதமாக அமைந்துள்ளது. விரைவில் அவரது பிரச்சினை சரியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X