நாளை வீடு திரும்பும் ஆருயிர் நண்பர் ரஜினிகாந்த்.. மகிழ்ச்சி தெரிவித்த இசைஞானி இளையராஜா!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வேட்டையன் படம் திரையரங்குகளில் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது அவர் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து நடித்து வருகிறார். இதனிடையே கடந்த செப்டம்பர் 30ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் நாளைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நலம் தேற முன்னதாக கமல்ஹாசன், விஜய், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பிரார்த்தனை மேற்கொள்வதாக குறிப்பிட்டிருந்தனர்.

rajinikanth vettaiyan movie ilaiyaraaja

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு முன்னதாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். அவருடைய உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் நாளைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து மூன்று மாத காலங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேட்டையன் படம்: ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு கடந்த மாதத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் சூட்டிங்கிற்காக விசாகப்பட்டினம் சென்றிருந்தார் ரஜினிகாந்த். இதனிடையேதான் அவருக்கு உடடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். இதனிடையே இது வழக்கமான செக்கப் தான் என்று அவரது மனைவி கூறியிருந்தார். இதனிடயே ரஜினியின் உடல்நிலை தேறுவதற்காக ரசிகர்கள் கோயில்களில் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

உடல்நிலை பாதித்த ரஜினிகாந்த்: முன்னதாக நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் ரஜினியின் உடல்நிலை சீராக பிரார்த்தனை மேற்கொள்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இதனிடயே தற்போது இசைஞானி இளையராஜா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளது குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டுள்ள இளையராஜா, அவர் நாளை வீடு திரும்பவுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த், நல்ல உடல்நலனும் சிறப்பான ஆரோக்கியமும் பெற்று வாழ இறைவன்அருள் எப்போதும் கிடைக்கட்டும் என்றும் இந்தப் பதிவில் கூறியுள்ளார்.

rajinikanth vettaiyan movie ilaiyaraaja

இளையராஜா மகிழ்ச்சி: நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா கூட்டணி முன்னதாக பல படங்களில் இணைந்து மேஜிக் செய்திருந்தது. இவர்களின் நட்பு நீண்ட காலங்களாக தொடர்ந்துவரும் நிலையில், தற்போது ரஜினியின் உடல்நிலை தேற இளையராஜா பிரார்த்தித்துள்ளார். அடுத்ததாக ரஜினியின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்து கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X