Bhavatharini: திட்டு வாங்கிக்கிட்டுதான் பாடினேன்..முதல் பாடல் அனுபவம் பகிர்ந்த பவதாரிணி பழைய பேட்டி!

சென்னை: பிரபல பின்னணி பாடகி பவதாரிணி உடல்நலக்குறைவால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இலங்கையில் உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு தேனியில் இளையராஜாவின் பண்ணைபுரம் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பவதாரிணி குறித்து பகிர்ந்துக் கொள்ள அதிகமான விஷயங்கள் இருந்த போதிலும் அவரது தனிப்பட்ட குரலால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டதை குறிப்பாக சுட்டிக் காட்டலாம். அவர் அதிகமாக தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர்கள் இசையில் பாடியுள்ளார்.

பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் பவதாரிணி. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பவதாரிணிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. கீமோதெரபிக்கு அவரது உடல் ஒத்துழைக்காத நிலையில் அவருக்கு இலங்கையில் வைத்து ஆயுர்வேத சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் பவதாரிணியை அங்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் கடந்த இரு தினங்களக்கு முன்பு இலங்கை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் கோலிவுட்டில் அதிகப்படியான அதிர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

Music composer Ilaiyarajas Daughter Bhavatharini throwback video on her first song

இளையராஜா மகள் பவதாரிணி: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மரணம் கோலிவுட்டில் அதிகப்படியான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்றுவந்தார் பவதாரிணி. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் கோலிவுட்டில் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழில் தன்னுடைய அப்பா இளையராஜா மற்றும் சகோதரர்கள் இசையில் பாடல்களை பாடி வந்தார் பவதாரிணி. சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் அவர் பாடல் பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் பவதாரிணி: இந்நிலையில் இசையமைப்பாளராகவும் சில படங்களில் அவர் இயங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களில் அவர் இசையமைத்துள்ளார். இதில் ரேவதியின் மித்ர மை பிரண்ட் உள்ளிட்ட படங்கள் அடக்கம். பவதாரிணி அதிர்ந்தும் பேசாதவர் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தற்போது அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். தன்னுடைய அருமை மகள் சொல்வதை எல்லாம் கேட்பவர் இளையராஜா என்றும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பாசத்தை கொட்டி வளர்ந்த மகள், தற்போது தன்னுடன் மட்டுமில்லாமல் உலகத்திலேயே இல்லை என்பதை ஜீரணம் செய்ய முடியாமல் இளையராஜா உடைந்துப் போனதை நேற்றைய தினம் பார்க்க முடிந்தது.

பவதாரிணி பேட்டி: சிறப்பான வாய்சிற்கு சொந்தக்காரரான பவதாரிணியின் முந்தைய பேட்டிகள் உள்ளிட்டவை தற்போது சமூக வலைதளத்தில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் பிரபல சேனலுக்கு பவதாரிணி அளித்த பேட்டியில் மிகவும் உற்சாகமாக பல தகவல்களை பகிர்ந்துள்ளார். கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இருவரும் தங்களது வீட்டில் மாறி மாறி ட்யூன்களை கம்போஸ் செய்வதை பார்த்து தனக்கும் இசையமைப்பாளராகும் ஆர்வம் வந்ததாகவும் இசையமைக்க தான் கற்றதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுவயதிலிருந்தே தான் பாட்டு, பியானோ வகுப்புகளுக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டாக இசையமைப்பு: சிறுவயதிலேயே தன்னுடைய அண்ணன் மற்றும் தம்பியுடன் இணைந்து பாடல்களை விளையாட்டாக கம்போஸ் செய்ததாகவும் பவதாரிணி தெரிவித்துள்ளார். தன்னுடைய அப்பா இசையமைப்பில் தான் பாடிய முதல் பாடல் மஸ்தானா மஸ்தானா பாடலை திட்டு வாங்கிக்கொண்டுதான் தான் பாடியதாகவும் அவர் வெளிப்படுத்தினார். மிகவும் குறைந்த வயதில் இந்தப் பாடலை தான் பாடியதாகவும் அப்பாவின் உதவியாளர்கள் தனக்கு உதவி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய அம்மாவிற்கும் மியூசிக்கில் அதிக ஆர்வம் இருந்ததையும் அவர் அந்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

செய்வதறியாமல் திணறல்: தன்னுடைய மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்கு தேசிய விருது கிடைத்தபோது, அதிகமான பாராட்டுக்கள் அப்பாவிற்குதான் கிடைத்தது என்று குறிப்பிட்ட பவதாரிணி, வீடு முழுவதும் பொக்கேவாக இருந்தது என்றும் தனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றும் ஆனால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் பவதாரிணி தனது பேட்டியில் பேசியுள்ளார். தாங்கள் குடும்பத்துடன் வெங்கட் பிரபு உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து பொழுதை கழிக்கும்போது தென்றல் வந்து தீண்டும்போது பாடலைத்தான் அதிகமாக பாடுவோம் என்றும் அவர் சுவாரஸ்யமாக பேசியதை பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X