அப்பறம் ஏன் கேட்கமாட்டாரு? ஒரு மாதம் மட்டும் ராயல்டி இத்தனை கோடியாமே! இளையராஜா குறிவைப்பது அதைத்தான்

சென்னை: தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக உலக அளவில் அறியப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. 80களில் இருந்து இசையமைத்து வரும் இளையராஜா இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். தொழிற்நுட்பங்களே வளராத காலகட்டத்தில் இருந்து இசையமைத்து வரும் இளையராஜா இன்றைக்கும் பலரது தூக்கத்திற்கு துணையாக இருக்கின்றார், வழிப்போக்கனாக இருக்கின்றார், ஏன் மனதை சாந்தப்படுத்தும் மனநல மருத்துவராக இருக்கின்றார் என பலர் கூறியும் கேட்டதுண்டு.

இப்படியான இளையராஜாவை ஆகா ஓகோ எனக் கொண்டாடும் அவரது ரசிகர்களே அவர்மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவும் செய்கின்றனர் என்றால் அது, இளையராஜாவின் சர்ச்சையான பேச்சுகளுக்குத்தான். மேலும் இளையராஜா எதாவது ஒரு கருத்தை சர்ச்சைக்குரிய வகையில் பேசி தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிகம் கிசுகிசுக்கப்படும் நபராக இருந்து வருகின்றார்.

Ilayaraaja

அதேபோல் இளையராஜா குறித்து அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்று, அவர் தனது பாடல்களுக்கு கேட்கும் காப்புரிமைதான். காப்புரிமை தொடர்பான சட்டங்கள் இந்தியாவில், மிகவும் தீவிரமாக அமல் படுத்துவதற்கு முன்னால் இருந்தே இசையமைத்து வரும் இளையராஜா பல படங்களுக்கு பணமே பெற்றுக்கொள்ளாமல் இசையமைத்துக் கொடுத்துள்ளார் என பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஊடகங்களில் பேசியுள்ளனர்.

மேலும், பொதுவெளியில், 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார் இவரிடம் இல்லாத காசா, அப்படி இருக்கும்போது இவர் ஏன் இப்படி ராயல்டி, காப்புரிமை அதன் மூலம் வரும் பணம் என நடந்து கொள்கின்றார் போன்ற கேள்விகளை பலரும் கேட்கின்றனர். ஆனால் மற்ற இசையமைப்பாளர்கள் யாராவது இப்படிக் கேட்கின்றார்களா என்ற கேள்வியை எல்லாம் சேர்த்தே கேட்கின்றனர். ஆனால் உண்மை நிலவரம் என்றால், மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்களது பாடல்களுக்கான காப்புரிமைத் தொகை தங்களுக்கு வரும்படி படத்தில் ஒப்புக்கொள்ளும்போதே ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு விடுகின்றனர்.

Ilayaraaja

ஆனால் சம்பளமே வாங்காமல் இசையமைத்துக் கொடுத்த படங்கள், குறைவான சம்பளம் பெற்றுக்கொண்டு இசையமைத்துக் கொடுத்தப் படங்கள் என பல படங்கள் உள்ளது. மேலும் காப்புரிமைச் சட்டங்கள் கடுமையாக பின்பற்றாத கால கட்டத்தில் இசையமைத்த பல படங்களுக்கு காப்புரிமை சில படங்களுக்கு இளையராஜா வசமும், சில படங்களுக்கு தயாரிப்பாளர்கள் வசமும் உள்ளது என கூறப்படுகின்றது.

மேலும் சமீப காலங்களில் ஒரு இசையமைப்பாளருக்கு அவர் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை மூலம் கிட்டத்தட்ட ரூபாய் 40 இலட்சங்கள் ஒரு மாதத்திற்கு கிடைக்கின்றது என கூறப்படுகின்றது. அப்படி இருக்கும்போது இளையராஜாவுக்கு எப்படியும் மாதம் தோராயமாக ரூபாய் 10 கோடி கிடைக்கும் என கூறப்படுகின்றது. இப்படி இருக்கும்போது இளையராஜா ஏன் தனது ராயல்ட்டி தொகைகளை விடவேண்டும் என விபரம் தெரிந்த பலர் இளையராஜாவுக்கு சாதகமாக பேசி வருகின்றனர். சமீபத்தில் கூட கூலி படத்தின் டைட்டில் கார்டிற்கும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்த கண்மணி பாடலுக்கு ராயல்ட்டி கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X