Music composer Ilayaraja: மன்னர்கள் செய்ததை பிரதமர் செய்துள்ளார்.. இளையராஜா நெகிழ்ச்சி!

சென்னை: அயோத்தியில் நீண்ட நாட்களாக பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ராமர் கோயில் கட்டப்பட்டு இன்றைய தினம் கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் சர்வதேச அளவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் சச்சின் டெண்டுல்கல், விராட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த விழா குறித்து ஏராளமான பிரபலங்களும் தங்களது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

இன்றைய தினம் அயோத்தி நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன. ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ராம்சரண், தனுஷ் என ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தோடு பங்கேற்றதை பார்க்க முடிந்தது. இன்று பகற்பொழுதில் கருவறையில் பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராமர் புகழ் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று தெரிவித்தார்.

Music composer Ilayaraja hails PM Narendra modi for Ayodhya Ram temple

அயோத்தி ராமர் கோயில்: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா இன்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இந்திய அளவில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தனுஷ், அபிஷேக் பச்சன், கங்கணா ரனாவத் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்களும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட விளையாட்டுத்துறை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமாக பங்கேற்றனர். இந்நிலையில் ராமர் கோயில் கருவறையில் பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

பாலராமர் பிரதிஷ்டை: இந்த பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி தீபாராதனை செய்தார். தொடர்ந்து பொதுமக்கள் வழிபாட்டிற்காக கோயில் திறக்கப்பட்டது. இந்நிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து இசைஞானி இளையராஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ராமர் பிறந்த இடத்திலேயே ராமருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது என்று கூறியுள்ள இளையராஜா, இதற்காக பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் என்று தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் மன்னர்கள்தான் கோயில்கள் கட்டினார்கள் என்று கூறியுள்ள இளையராஜா, தற்போது பிரதமர் மோடி கோயிலை கட்டியுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இளையராஜா நெகிழ்ச்சி: மோடியின் இந்த செயலை சொல்லும்போதே கண்ணீல் நீர் வருவதாகவும் இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார். தேனாம்பேட்டை நாரத கான சபாவில் நடைபெற்ற சென்னையில் அயோத்தி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் இளையராஜா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இதில் பேசிய இளையராஜா, ராமர் கோயில் இந்தியா முழுவதற்குமான கோயில் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். இ,னறைய நாள் சரித்திரத்தில் முக்கியமான நாள் என்றும் ராமர் கோயில் பிரதமர் மோடிக்கு அழியாத புகழை தேடித்தரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கான கோயில்: யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் என்றும் இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதை செய்வதற்கு பிரதமர் மோடிக்கு கடவுள் எழுதியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அயோத்தியில் இருக்க வேண்டிய தான் சென்னையில் உள்ளது வருத்தமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள இளையராஜா, இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது ஆறுதலை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தியாவில் ஏராளமான கோயில்கள் இருந்த போதிலும் அந்தந்த பகுதிகளை ஆண்ட மன்னர்களால் அந்தக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் ராமர் கோயில் மொத்த இந்தியாவிற்கான கோயிலாக உள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X