மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... ஆர்ஆர்ஆர் டீமிற்கு வாழ்த்து சொன்ன இளையராஜா!
சென்னை : ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் க்ளோப் விருதை தட்டிச் சென்றுள்ளது.
இந்த விருதை பெற்றுள்ள முதல் ஆசிய பாடல் என்ற பெருமையையும் நாட்டு நாட்டு பாடல் பெற்றுள்ளது.
இந்த விருதை படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுள்ளார். அவருக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஆர்ஆர்ஆர் படம்
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் சுதந்திர போராட்டக் காலத்தை மையமாக வைத்து வெளியான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் 1200 கோடி ரூபாய் வசூலை குவித்தது. இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இசையமைப்பாளர் கீரவாணி
இந்தப் படத்திற்கு பிரபல தெலுங்குப்பட இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக படத்தின் நாட்டு நாட்டு பாடல் மிகச்சிறப்பாக அமைந்தது. இந்தப் பாடலில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் போட்டிப் போட்டு நடனமாடியிருந்தனர். இந்தப் பாடல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது.

சர்வதேச கவனம் பெற்ற ஆர்ஆர்ஆர் படம்
ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததுடன் பல விருதுகளையும் கைப்பற்றியுள்ளது. தற்போது ஆஸ்கார் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் க்ளோப் விருதை தட்டிச் சென்றுள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் படக்குழுவினர் பங்கேற்றனர்.

கோல்டன் க்ளோப் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படம்
ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர் ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர். விழாவில் கெத்தாக சென்று விருதை பெற்றுக் கொண்டார் இசையமைப்பாளர் கீரவாணி. அவருக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இளையராஜா வாழ்த்து
ஏஆர் ரஹ்மான், தெலுங்குப்பட நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்டவர்களும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதனிடையே இசையமைப்பாளர் இளையராஜாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இளையராஜா மகிழ்ச்சி
படக்குழுவினரின் கடின உழைப்பே அவர்களுக்கு இந்த விருதை பெற்றுத் தந்துள்ளதாகவும் இதையடுத்து தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள இளையராஜா, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











