twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்.. தேசிய கொடியேற்றி இளையராஜா மரியாதை!

    |

    திருவண்ணாமலை : இன்றைய தினம் நாட்டின் 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரபலங்களும் தங்களது கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    Recommended Video

    75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.. தேசியக் கோடியை ஏற்றிய தலைவர்கள் *Tamilnadu | Oneindia Tamil

    சுதந்திர தினத்தையொட்டி திரையுலகப் பிரபலங்கள் பலரும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்தும் இன்றைய தினம் தனது வாழ்த்துக்களை நாட்டு மக்களுக்கு பகிர்ந்துள்ளார்.

    வெண்பாவிற்கு செளந்தர்யா கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்...பாரதி கண்ணம்மாவில் அடுத்து இதுதான் வெண்பாவிற்கு செளந்தர்யா கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்...பாரதி கண்ணம்மாவில் அடுத்து இதுதான்

    76வது சுதந்திர தினம்

    76வது சுதந்திர தினம்

    இன்றைய தினம் 76வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் நாடு ஈடுபட்டுள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நாம் கடந்துள்ளோம். நாம் எளிமையாக அனுபவித்துவரும் இந்த சுதந்திரத்திற்காக நமது முன்னோர்கள் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமில்லை. பலரது கல்லறையில்தான் இந்த சுதந்திரம் நமக்கு உரியதாக மாறியுள்ளது.

    சுதந்திர தாகம்

    சுதந்திர தாகம்

    அடிமைத்தனமான வாழ்க்கையில் நம்முடைய நாட்டின் வளங்கள் கைமாறின. அதையெல்லாம் கண்ணீருடன் பார்ப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாமல் தவித்தன பல உள்ளங்கள். அதன் வெளிப்பாடே சுதந்திர தாகமாக வெளிப்பட்டது. என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று கவிஞர் பாரதியாரையும் பாட வைத்தது.

    தலைவர்கள் வாழ்த்து

    தலைவர்கள் வாழ்த்து

    இன்றைய தினம் 76வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி வரும் நிலையில் ஏராளமான அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை நாட்டு மக்களுக்கு பகிர்ந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

    வீடுகளில் தேசியக் கொடி

    வீடுகளில் தேசியக் கொடி

    முன்னதாக பிரதமரின் கோரிக்கையை ஏற்று பல பிரபலங்களும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியேற்றும் இயக்கத்தில் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், மறைந்த நடிகர் சிவாஜி உள்ளிட்டவர்களின் வீடுகளில் தேசிய கொடி கடந்த இரு தினங்களாக பறந்து வருகின்றன.

    தேசிய கொடியேற்றி இளையராஜா மரியாதை

    தேசிய கொடியேற்றி இளையராஜா மரியாதை

    இந்நிலையில் திருவண்ணாமலைக்கு சென்ற பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அங்கு ரமண மகரிஷி ஆசிரமத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்துள்ளார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    ரமணர் ஆசிரமத்தில் இளையராஜா

    ரமணர் ஆசிரமத்தில் இளையராஜா

    ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இளையராஜா. இவர் அடிக்கடி திருவண்ணாமலைக்கும் மலையடிவாரத்தில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்திற்கும் செல்வதை வழக்கமாக கொண்டவர். இந்நிலையில் தற்போது இவர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்துள்ளார்.

    ராஜ்யசபா எம்பி இளையராஜா

    ராஜ்யசபா எம்பி இளையராஜா

    இளையராஜா இசையில் 1400க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் பல படங்கள் வெற்றிப்படங்கள். இவரது இசைக்காகவே படங்கள் ஓடிய வரலாறும் உள்ளது. இவருக்கு பல அங்கீகாரங்கள் கிடைத்துவரும் நிலையில் சமீபத்தில் ராஜ்யசபா நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    English summary
    Music composer Ilayaraja hoists national flag on behalf of 76th Independence day
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X