விபத்தில் முறிந்த கை எலும்பு.. இனி வாசிக்கவே முடியாதா? கலங்கிய பாடகர்!
சென்னை: மாற்றுத்திறனாளியான நொச்சிப்பட்டி திருமூர்த்தி தனது கம்பீரமான குரல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். எந்த பாடலாக இருந்தாலும் தனக்கே உரித்தான பாணியில் தாளம் போட்டுக்கொண்டே பாடும் திறமை கொண்ட இவர், அண்மையில் ஏற்பட்ட விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, இனி வாசிக்கவே முடியாது என பயந்தவிட்டதாக கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் திரு மூர்த்தி. பிறவியிலேயே கண் பார்வை இல்லாத இவரின் தாயார் சில ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை நோயால் இறந்துவிட,கடவுள் கொடுத்த குரல் வளத்தால் அந்த கிராமத்தில் பாடல்களை பாடி வந்த திருமூர்த்தி பாடிய அஜித், நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்தில் வரும், கண்ணாண கண்ணே பாடல் இணையத்தில் டிரெண்டானது.

அண்ணாத்த படத்தில்: இந்த காந்தக்குரலுக்கு சொந்தக்காரரான திருமூர்த்தியை, இசையமைப்பாளர் இமான் தனது உதவியாளர் மூலம் தேடி கண்டுபிடித்தார். இதையடுத்து, சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு பிள்ளை சிறப்பு நிகழ்ச்சியின் போது, திருமூர்த்தியை பாடகராக அறிமுகப்படுத்த போவதாக அறிவித்திருந்தார் இமான். இதைத்தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடலான 'வா சாமி' என்ற பாடலைப் பாடி பாடகரானார் திருமூர்த்தி.
வாசிக்கவே முடியாதுனு பயந்தேன்: இந்த பாடல்கள் மட்டுமில்லாமல் பிளாஸ்டிக் குடம், பானை என எதுவாக இருந்தாலும் அதல் தாளம் போட்டுக்கொண்டே பாடுவதில் சிறந்தவரான திருமூர்த்தி அண்மையில் விபத்தில் ஒன்றில் சிக்கி உள்ளார். இதில், கை எலும்பு முறிந்துவிட்டதாகவும், இதனால், இனி வாசிக்கமுடியாமல் போய்விடுமோ என்று பயந்தேன். இப்போது, அறுவை சிகிச்சை செய்து கையில் பிளேட் வைத்து இருக்கிறார்கள். இமான் சாருக்கு விஷயம் தெரிந்ததும், அவர் தான் என் ஆப்ரேஷனுக்கான பணத்தை எனக்கு அனுப்பினார். அதை என்னைக்கும் மறக்கவே மாட்டேன் என்று திருமூர்த்தி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











