கார்த்திக் ராஜா திருச்சியில் நடத்தும் இசை நிகழ்ச்சி.. குஷ்பூ என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா!
சென்னை : இளையராஜாவின் இசை வாரிசான கார்த்தி ராஜா, பல படங்களில் தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் வரும் 24ம் தேதி திருச்சியில் இவர் இசைக் கச்சேரி ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பொன் மாலைப் பொழுது என்ற தலைப்பில் நடக்கவுள்ள இந்த இசைக் குறித்து நடிகை குஷ்பூவும் தனது இன்ஸ்டாகிராமில் அப்டேட் கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா 1400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இடையிடையே இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இவர் தொடர்ந்து இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவில் இவர் இசைக்கச்சேரி நடந்தது. சிறப்பாக களைக்கட்டியது.

இசையமைப்பாளர் யுவன்
இவரைத் தொடர்ந்து இசையமைப்பாளரும் இளையராஜாவின் இளைய மகனுமான யுவன் சங்கர் ராஜாவும் தன்னுடைய திரைப்படங்களுக்கு இசையமைக்கும் பணிகளுக்கு இடையில் பல இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார். பல்வேறு இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வரும் இவர் படத் தயாரிப்புகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா
இந்நிலையில் இளையராஜாவின் மூத்த மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவும் தற்போது இசைக் கச்சேரிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். இம்மாதம் 24ம் தேதி திருச்சியில் இவரது இசைக்கச்சேரி நடக்கவுள்ளது. கலா மாஸ்டர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நடன நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.

சிறப்பு விருந்தினர் குஷ்பூ
இந்நிலையில் நடிகை குஷ்பூ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த இசைக் கச்சேரி குறித்து அப்டேட் தெரிவித்துள்ளார். தன்னுடைய மனதிற்கு நெருக்கமான இடம் திருச்சி என்றும். தானும் திருச்சியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஷிவாங்கியும் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகி குக் வித் கோமாளி ஷிவாங்கியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சாதனா சர்கம், ஹரிஹரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்கவுள்ளதாக முன்னதாக கார்த்திக் ராஜா அறிவித்திருந்தார். இவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் முழுக்க முழுக்க தமிழ் பாடல்கள் மட்டுமே பாடப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











