சமந்தாவின் சாகுந்தலம் பட பாடல்களுக்கு கீரவாணி பாராட்டு..ரசிகர்களை கவர்ந்த ஏலேலோ பாடல்!
சென்னை : யசோதா படத்தை தொடர்ந்து நடிகை சமந்தாவின் சாகுந்தலம் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
சரித்திர பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஏலேலோ பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள சாகுந்தலம் படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் ஏலேலோ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நடிகை சமந்தா
நடிகை சமந்தாவின் யசோதா படம் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சமந்தாவின் நடிப்பில் சாகுந்தலம் படம் சரித்திர பின்னணியில் உருவாகியுள்ளது. தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது.

மணிசர்மா இசை
இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் தேவ் மோகன் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் ஏலேலோ பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை கட்டிப் போட்ட நிலையில், தற்போது படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே படம் ரிலீசாக உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. படம் 3டிக்கு மாற்றப்படுவதால் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு முன்னதாக தகவல் தெரிவித்தது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலரில் 3டிக்கான தேவை உணர்த்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 17ல் ரிலீஸ்
இந்தப் படத்தில் சமந்தாவை சுற்றியே கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகள் எடுக்கப்பட்டுள்ளதையும் ட்ரெயிலர் உணர்த்தியுள்ளது. வரும் 17ம் தேதி படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பை இந்தப் படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் அதிகரித்துள்ளன.

பிரம்மாண்டமான செட்
ஆனாலும் ட்ரெயிலரை வைத்து பார்க்கையில், படத்தில் தெலுங்குப் படத்தின் சாயல் அதிகமாக உள்ளதால், படம் தமிழ் ரசிகர்களிடையே எத்தகைய தாக்கத்தை எற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசர் கால கதையை மையமாக கொண்ட இந்தப் படத்தில் பிரம்மாண்டமான செட்களும் கவனத்தை ஈர்த்துள்ளன.

கீரவாணி பாராட்டு
இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் அதிகமாக ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக பிரபல தெலுங்குப்பட இசையமைப்பாளரான கீரவாணி தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் படத்தின் இசையமைப்பாளர் மணிஷர்மாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவருக்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நன்றி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











