twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திடீர் மாரடைப்பு.. பிரபல இசை அமைப்பாளர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி.. ரசிகர்கள் இரங்கல்!

    By
    |

    மும்பை: பிரபல இசை அமைப்பாளர் மாரடைப்பு காரணமாக, மரணம் அடைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பிரபல மராத்தி இசை அமைப்பாளர் நரேந்திர பிடே. பல மராத்தி படங்களுக்கும் நாடகங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

    ராக்கி திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் ! ராக்கி திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் !

    இவர், இசை அமைத்த பல பாடல்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பை பெற்றுள்ளன.

    புஷ்பக் விமான்

    புஷ்பக் விமான்

    இவர், தியோல் பேண்ட், பேயிங் கோஸ்ட், பயாஸ்கோப், ஹம்பி, லதே ஜோஷி, புஷ்பக் விமான், முல்ஷி பேட்டர்ன், 66 சதாசிவ், ஹரிசந்திராச்சி பேக்டரி உட்பட பல ஹிட் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இந்தப் படங்களின் பாடல்களும் கவனிக்கப்பட்டன. குடும்பத்துடன் மகாராஷ்டிர மாநிலம் தானேயில் வசித்து வந்தார்.

    சர்சேனாபதி ஹம்பிராவ்

    சர்சேனாபதி ஹம்பிராவ்

    சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டூடியோவையும் நடத்தி வந்தார். இவர் இசை அமைத்துள்ள, சர்சேனாபதி ஹம்பிராவ் என்ற படம் வெளியாக இருக்கிறது. அதுவே அவர் இசை அமைத்த கடைசி படமாக அமைந்துவிட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    திடீர் மறைவு

    திடீர் மறைவு

    இதையடுத்து அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 47. மறைந்த நரேந்திர பிடேவுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவருடைய இந்த திடீர் மறைவு இந்தி மற்றும் மராத்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ஈடுசெய்ய முடியாதது

    ஈடுசெய்ய முடியாதது

    மராத்தி நடிகர் ஓம்கர் தட்டே கூறும்போது, அதிகமான இசை ஞானம் கொண்டவர் பிடே. அவர் மராத்தி மொழியின் இசையை திரையில் கொண்டு வந்தார். மராத்தி இசைத்துறையில், அவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று கூறியுள்ளார். சோனாலி குல்கர்னி, மகேஷ் மஞ்சரேக்கர் உட்பட பல மராத்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Narendra Bhide, who had composed music for several Marathi films, died of a heart attack in Pune on Thursday morning. He was 47.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X