Don't Miss!
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- News
எவ்வளவு ’துணிவு’ உங்களுக்கு.. வாரிசு ரேஸால் ஓனர்களுக்கு சிக்கல்! 34 தியேட்டர்களுக்கு பறந்த நோட்டீஸ்!
- Lifestyle
வீக்கத்தைத் தடுக்க குளிர்காலத்தில் இந்த 5 உணவுகள நீங்க சாப்பிடவே கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Automobiles
டெலிவரி தொடங்கியாச்சு.. இனி ஃபார்ச்சூனருக்கு பதிலா இந்த காருலதான் எல்லா அரசியல்வாதிகளும் வலம் வர போறாங்க!
- Technology
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- Sports
நீங்க வந்தா மட்டும் போதும்.. ரிஷப் பண்ட்-யிடம் பாண்டிங் வைத்த சுவாரஸ்ய கோரிக்கை.. ரசிகர்கள் பாராட்டு
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
மியூசிக் கம்போசிங்கை விட்டுட்டு கிரிக்கெட் ஆடினோம்... எஸ்கே20 படம் குறித்து மியூசிக் டைரக்டர் அப்டேட்!
சென்னை :நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது எஸ்கே20. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் பாடல் சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லவுள்ளது டீம். இந்நிலையில் ஒருபுறம் டப்பிங் வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அஜித்,
விஜய்
சாதிக்க
முடியாததை
சாதித்த
சிவகார்த்திகேயன்..
வெற்றி
பாதைக்கு
திரும்புமா
கோலிவுட்?

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்துள்ளார். அவரது டாக்டர் மற்றும் டான் படங்கள் அவரது தயாரிப்பிலேயே உருவாகி சிறப்பான வெற்றியையும் வசூலையும் அவருக்கு கொடுத்துள்ளது. இதையடுத்து அவர் உற்சாகமாக அடுத்தடுத்த பிராஜக்ட்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

டான் படம்
கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் வெளியான அவரது டான் படம், அப்பா-தந்தை உறவை மிகவும் அழகாக ரசிகர்களுக்கு தந்துள்ளது. இந்தப் படத்தை பார்த்தவர்கள், அவர்களது அப்பாக்களை நினைவு கூர்ந்து கண்கலங்கிய சம்பவங்கள் அதிகமாக நடந்தது. மேலும் படத்தில் ஆசிரியர்-மாணவர் உறவும் சிறப்பாக காட்டப்பட்டது.

வில்லன்களாகும் அப்பாக்கள்
அப்பாக்கள் தங்களது மகன்களை ஹீரோக்களாக்க தாங்கள் கடைசிவரை அவர்களுக்கு வில்லன்களாகவே இருந்துவிட்டு போவதாக படத்தில் வரும் டயலாக் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி தன்னுடைய முதல் படத்திலேயே ஸ்கோர் செய்துள்ளார்.

வசூல்மழையில் டான்
படம் தற்போது அதிகமான வசூலை மேற்கொண்டு வருகிறது. திரையரங்குகளுக்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் குவிந்து வருகின்றனர். கடந்த வாரயிறுதியில் படம் சிறப்பான கலெக்ஷனை பெற்ற நிலையில், வார நாட்களிலும் படம் அரங்கு கொள்ளாத காட்சிகளாகவே காணப்படுகிறது.

எஸ்கே 20 படம்
இந்நிலையில் தற்போது அவரது எஸ்கே20 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. பாடல் காட்சிகள் மட்டுமே சூட்டிங் எடுக்கப்பட வேண்டிய சூழலில், படக்குழு அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளது. மேலும் படத்தின் டப்பிங் பணிகளும் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆசிரியராக சிவகார்த்திகேயன்
டான் படத்தில் மாணவராக நடித்திருந்த சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ஆசிரியராக நடித்துள்ளார். அவருடன் வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரீஸ் ஜோடியாக இணைந்துள்ளார். கடந்த ஜனவரியில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில் தொடர்ந்து 38 நாட்கள் சூட்டிங் எடுக்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது.

ஆகஸ்ட் 12ல் ரிலீஸ்
படம் ஆகஸ்ட் 12ம் தேதி திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படம் குறித்து படத்தின் இசையமைப்பாளர் தமன் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். தெலுங்கில் முக்கியமான டைரக்டராக உள்ள அனுதீப் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில் படத்தில் அதிகமான காமெடி காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

படத்தில் 4 பாடல்கள்
மேலும் படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பாடல் கம்போசிங்கில் உடன் இருந்து சிவகார்த்திகேயன் தன்னுடைய ஆலோசனைகளை தருவார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த கம்போசிங்கின் போது தாங்கள் பாடல்கள் குறித்து அதிகமாக பேசியதைவிட அதிகமாக கிரிக்கெட் விளையாடினோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்
படத்தில் 4 பாடல்கள் உள்ள நிலையில் 3 பாடல்கள் கம்போசிங் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் ஒரு பாடல் மீதம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுமட்டுமில்லாமல் படத்தில் ஒரு பிட் சாங்கும் உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.