ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்!

சென்னை: ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கிறார்.

கிரைம், சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்பட மாக உருவாகும் இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஜிப்ஸி படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலா ரோசய்யா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை சரண் சண்முகம் மேற்கொள்கிறார். இவர் கிஷோர் மற்றும் லெனின் அவர்களிடம் உதவி எடிட்டராக பணிபுரிந்தவர்.

அடுத்த கட்ட

அடுத்த கட்ட

நிறைய புது முயற்சிகள் செய்து புது புது அடையாளங்களை உருவாக்குவது தான் இன்றைய சினிமாவின் அடிப்படை தேவையாக இருக்கிறது. அந்த வகையில் ஷாம் டி ராஜ் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை இந்த ஆண்டு முழு மனதுடன் செய்ய தயாராகி வருகிறார் .

திரைக்கதை அமைத்து

திரைக்கதை அமைத்து

கால் டாக்ஸி படத்தை நிறைய காதல் மற்றும் காதல் லீலைகள் பற்றி சொல்லி படம் எடுத்த பாண்டியன் தனது அடுத்த படத்தில் மிகவும் வித்யாசமான முயற்சிகள் செய்து தனது ரெகுலர் ஃபார்மெட்டில் இருந்து மாறுபட்டு திரைக்கதை அமைத்து உள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது .

சிறப்பு காட்சியில்

சிறப்பு காட்சியில்

பாண்டியனின் படத்தை விஜய் சேதுபதி ஆதரவு கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.அதே போல் இந்த படத்திற்க்கும் கண்டிப்பாக விஜய்சேதுபதி ஆதரவு கொடுத்து ஒரு சிறப்பு காட்சியில் தோன்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

நேர்த்தியாக செய்ய

நேர்த்தியாக செய்ய

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது. அது மட்டும் அல்லாமல் படத்தின் பாடல் பதிவுகளை மிகவும் நேர்த்தியாக செய்ய பல விதமான லோகேஷன்ஸ் பார்த்த வண்ணம் இந்த படத்தின் குழு பரபரப்பாக இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஷாம் டி ராஜ் ஹீரோவாக தோன்றி தனது செலுலாய்டு கணுவுகளை சிறப்பாக நிறைவேற்றுவார் என்று நம்புவோம் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X