மரண குத்து.. படப்பிடிப்பு தளத்தில் இறங்கி குத்திய பிரபல இசையமைப்பாளர்.. பிரமிக்க வைக்கும் வீடியோ!

சென்னை: பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் படப்பிடிப்பு தளத்தில் இறங்கி குத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பா.ரஞ்சித்தின் அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து, சூது கவ்வும், இறுதிச்சுற்று, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், கபாலி, பைரவா, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார் சந்தோஷ் நாராயணன்.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

அடுத்ததாக தனுஷின் 'கர்ணன்', 'ஜகமே தந்திரம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படங்கள் ரிலீசாவதற்கு முன்பாகவே இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

சியான் 60 படம்

சியான் 60 படம்

அதிலும் குறிப்பாக கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள கண்டா வர சொல்லுங்க பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்து. தற்போது கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விக்ரமை வைத்து இயக்கும் சியான் 60 படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

செம குத்து குத்தியுள்ளார்..

செம குத்து குத்தியுள்ளார்..

இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பறை இசை கலைஞர்கள் சுற்றி நின்று வாசிக்க, சந்தோஷ் நாராயணன் அவர்களுடன் இணைந்து செம குத்து குத்தியுள்ளார்.

 பின்றீங்களே ஜி

பின்றீங்களே ஜி

சந்தோஷ் நாராயணன் ஷேர் செய்துள்ள இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், பிரமித்து போயுள்ளனர். பலரும் மரண குத்து பாஸ் என பாராட்டி வருகின்றனர். இதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் 'ஆஹா.... பின்றீங்களே ஜி' என கமெண்ட் செய்துள்ளார்.

குவியும் லைக்ஸ்

சந்தோஷ் நாராயணனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும் அவரது இந்த குத்தாட்ட வீடியோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X