பேச்சுலர் பட இசையமைப்பாளர் சித்துகுமாருக்கு திருமணம்.. யாரை திருமணம் செஞ்சுருக்காரு தெரியுமா?
சென்னை : பேச்சுலர் உள்ளிட்ட படங்களில் இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் சித்துகுமாருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது.
பெற்றோர் நிச்சயத்துள்ள இந்தத் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு சித்து குமாருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
ஊட்டியை சேர்ந்த ராஜி என்ற பெண்ணை இவர் திருமணம் செய்துக் கொண்டார். இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் எச்ஆராக பணிபுரிந்து வருகிறார்.

இசையமைப்பாளர் சித்து குமார்
சித்தார்த், ஜிவி பிரகாஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சசி வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் சித்து குமார். இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் உள்ளிட்ட படங்களில் இசையமைத்ததன் மூலம் கவனம் பெற்றவர். வளர்ந்துவரும் இசையமைப்பாளர்களில் ஒருவரான இவர் அடிப்போலி என்ற வீடியோ பாடலை இசையமைத்து இயக்கியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படங்களில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மாறன் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் கண்ணை நம்பாதே, சசி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் நூறு கோடி வானவில் விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துவரும் படங்களில் இவர் தற்போது இசையமைத்து வருகிறார்.

லைகா புரொடக்ஷன்சின் படம்
மேலும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் மபொசி, அறிமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்கும் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி இசையமைத்து வருகிறார்.

சித்துகுமார் திருமணம்
இந்நிலையில் இன்றைய தினம் சித்து குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பெற்றோர் பார்த்து நிச்சயித்த ராஜி என்ற பெண்ணை இவர் திருமணம் செய்துக் கொண்டார். உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் சூழ சித்துக் குமாரின் திருமணம் மதுரையில் நடைபெற்றுள்ளது.

ஊட்டியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம்
ஊட்டியை சேர்ந்த ராஜி எம்பிஏ முடித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஐடி நிறுவனத்தில் எச்ஆராக பணிபுரிந்து வருகிறார். முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு ராஜியுடன் இணைந்து சித்து குமார் வீடியோ ஒன்றை உருவாக்கி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலானது.


Click it and Unblock the Notifications











