twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிறைய ஹிட்சை எதிர்பார்க்கலாம்.. குத்து ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீகாந்த் தேவா உறுதி!

    |

    சென்னை : பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா மீண்டும் உதயநிதியின் கலகத்தலைவன் படம்மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.

    தன்னுடைய 20வது வயதிலேயே விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார் ஸ்ரீகாந்த் தேவா.

    இந்நிலையில் நடுவில் சிறிது இடைவெளி ஏற்பட்ட நிலையில் தற்போது கலகத்தலைவர் சிறப்பான விமர்சனங்களை இவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

    ராஜ்கிரணை உரசிய நபரை திட்டித் தீர்த்த மருமகன் தனுஷ்ராஜ்கிரணை உரசிய நபரை திட்டித் தீர்த்த மருமகன் தனுஷ்

    இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா

    இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா

    பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா தன்னுடைய அப்பாவின் வழியில் சினிமாவில் இசையமைத்து பிரபல குத்துப்பாட்டு ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரை பெற்றவர். தன்னுடைய 20வது வயதிலேயே தன்னுடைய முதல் பட வாய்ப்பை பெற்றவர். ஆனால் அதற்கு முன்னதாகவே தன்னுடைய அப்பாவின்க்ழ 350 படங்களுக்கும் மேலாக பணிபுரிந்து இசையின் நுணுக்கங்களை பயின்றவர்.

    20 வயதில் 20 படங்கள்

    20 வயதில் 20 படங்கள்

    தன்னுடைய 20வது வயதிலேயே டபுள்ஸ் என்ற படத்தின் வாய்ப்பை பெற்ற ஸ்ரீகாந்த் தேவா, தொடர்ந்து விஜய்யின் சிவகாசி, சிம்புவின் குத்து, ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என ஹிட் படங்களை கொடுத்தார். தொடர்ந்து பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா, தற்போது சிறிது இடைவெளிக்கு பிறகு உதயநிதியின் கலகத்தலைவன் என்ற படத்திற்கு இசையமைத்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ளார்.

    இரண்டாவது இன்னிங்ஸ்

    இரண்டாவது இன்னிங்ஸ்

    இந்த இரண்டாவது இன்னிங்ஸ் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த் தேவா, தன்னுடைய செகண்ட் இன்னிங்சை பெரிய படத்திலிருந்துதான் துவக்க வேண்டும் என்று தான் நினைத்ததாகவும் அந்த கனவு தற்போது உதயநிதியால் நிறைவேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உதயநிதிக்கு நன்றியும் கூறியுள்ளார். இந்தப் படத்தற்கு அரோல் கரோலிதான் முதலில் தவிர்க்கமுடியாத காரணத்தால் அவரால் இசையமைக்க முடியாத நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து முடித்துள்ளார்.

    புதிய இசையமைப்பாளர்களிடம் கற்றும் ஸ்ரீகாந்த்

    புதிய இசையமைப்பாளர்களிடம் கற்றும் ஸ்ரீகாந்த்

    தற்போது வரும் புதிய இசையமைப்பாளர்களிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருப்பதாக ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்துள்ளார். அவர்கள் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் மற்ற படங்களுக்கு நோ சொல்வதை தான் ஆச்சரியமாக பார்ப்பதாகவும் இதன்மூலம் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் சிறப்பான கவனம் செலுத்த முடிவதையும் தான் கூர்ந்து கவனிப்பதாகவும் ஸ்ரீகாந்த் தேவா குறிப்பிட்டுள்ளார்.

    ஒரே நேரத்தில் 20 படங்கள்

    ஒரே நேரத்தில் 20 படங்கள்

    இளம் இசையமைப்பாளர்களிடம் இருந்து இந்த பழக்கத்தை தான் கற்று வருவதாகவும் தான் தன்னுடைய கேரியரை ஆரம்பத்த போது, சிவகாசி ஹிட்டிற்கு பிறகு 20 படங்கள் தனக்கு குவிந்ததாகவும், அனைவரும் தன்னுடைய கைகளில் அட்வான்சை திணித்ததாகவும் தெரிவித்த ஸ்ரீகாந்த் தேவா, ஒரே நேரத்தில் 20 படங்கள் கமிட்டானதால் அனைவரும் பாடல்களை ஒரே நேரத்தில் கேட்கத் துவங்கியதால் பாடல்களை ரசித்து செய்ய நேரமில்லாமல் தன்னுடைய கவனம் சிதறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    பாடம் கற்றுக் கொடுத்த அனுபவங்கள்

    பாடம் கற்றுக் கொடுத்த அனுபவங்கள்

    தற்போது அனுபவங்கள் பாடம் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் பக்குவத்தையும் தந்துள்ளதாகவும் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்துள்ளார். தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் கலகத்தலைவன் படத்திற்கு பிறகு மிகவும் கவனத்துடன் படங்களில் கமிட்டாகி இசையமைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இனி தன்னிடமிருந்து நிறைய ஹிட்சை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    English summary
    music director Srikanth deva assured he'll make more hit numbers in future
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X