முதல் முறையாக அந்த இசையமைப்பாளருடன் இணையும் ஷங்கர்? ராம்சரண் படத்தில் ஆன்போர்டு ஆவதாக தகவல்!
சென்னை: ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தில் யார் இசையமைப்பாளர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருபவர் ஷங்கர். ஜென்டில்மேன் முதல் 2.0 வரை ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது ராம்சரணை வைத்து தெலுங்கில் படம் ஒன்றை இயக்கவுள்ளார் ஷங்கர். இப்படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணையவுள்ள இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இப்படத்திற்கு தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து படக்குழு இதுவரை உறுதியாக அறிவிக்காத நிலையில் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஷங்கர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு ஏஆர் ரஹ்மான்தான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைப்பது உறுதியானால் ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைக்கும் முதல் படமாக இந்தப் படம் இருக்கும்.
இசையமைப்பாளர் தமன் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்த தமன், அப்படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











