Vijay Antony: மனசுல அமைதியோட ஏதாவது பண்ணுங்க.. அப்பாவின் வார்த்தைகளை புரிந்துக் கொள்ளாத மீரா!
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 12வது வகுப்பு படித்துவந்த அவரது மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் மனஅழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிப்பு, தயாரிப்பு என அடுத்தடுத்த களங்களில் தன்னை நிலை நிறுத்திவரும் விஜய் ஆண்டனி மற்றும் குடும்பத்தினருக்கு மீராவின் தற்கொலை அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை: நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தன்னுடைய திரைத்துறை பயணத்தை தமிழ் சினிமாவில் துவங்கியவர். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறமைகளுடன் தொடர்ந்து சினிமாவில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் தன்னுடைய பல பேட்டிகளில் பலருக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையில் பல பேச்சுக்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரது பேச்சுக்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.
அவரது கொலை படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்ததாக ரத்தம் படம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் அவரது மகள் மீரா இன்றைய தினம் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் விஜய் ஆண்டனி உள்ளிட்ட குடும்பத்தினரை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையின் பிரபல பள்ளியில் 12வது வகுப்பு படித்து வந்த நிலையில், இந்த விபரீத முடிவை மீரா எடுத்துள்ளார்.
விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை திருமணம் செய்த நிலையில் விஜய் ஆண்டனியின் படங்களை அவர் தொடர்ந்து தயாரித்து வருகிறார். இந்நிலையில் மீரா என்கிற லாராவின் இந்த மரணம் அவர்களது குடும்பத்தினரிடையே இடியாக இறங்கியுள்ளது. அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக களமிறக்கி வரும் விஜய் ஆண்டனியின் இயக்கத்தில் சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது. படம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அவருக்கு சிறப்பாக கைகொடுத்தது.
இந்நிலையில் தொடர்ந்து சிறப்பான பல உத்வேகம் அளிக்கக்கூடிய பேட்டிகளை கொடுத்துவரும் விஜய் ஆண்டனி, சமீபத்தில் ஒரு பேட்டியின்போது, இங்கு பெரிய பணக்காரர்கள் முதல் பிச்சைக்காரர்கள் வரை யாருக்கும் எதுவும் தெரியாது என்றும் யாரையும் கம்பேர் செய்யாமல் அனைவரும் ஒன்றுதான் என்றும் இருக்கும் இடத்திலிருந்து மனதிற்கு சந்தோஷமான விஷயங்களை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதேபோல ஒவ்வொரு ஆண்மகனும் தன்னுடைய குடும்பத்திற்காக உழைப்பதாகவும் ஸ்கூல் பீஸ், அம்மாவின் காட்ராக்ட், குழந்தைகளின் தேவைகள், மனைவியின் முனகல்கள் என ஒவ்வொரு விஷயத்திற்காகவும் அவன் போராட வேண்டியிருப்பதாகவும் இந்த பேட்டியில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். ஆண்கள் கரடுமுரடாக தெரிந்தாலும் குடும்பத்திற்காக ஒவ்வொரு ஆண்மகனும் போராடிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோல தெளிவான மனநிலையுடன் காணப்படும் விஜய் ஆண்டனியின் மகளின் இந்த முடிவு ஒவ்வொரு பெற்றோருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











