twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யுவன்சங்கர் ராஜா பிறந்தநாள் ஸ்பெஷல்... அசர வைக்கும் 23 ஆண்டு கால திரைப்பயணம்

    |

    சென்னை : இசைஞானி இளையராஜாவின் வாரிசான யுவன் சங்கர் ராஜா, பாடகர், இசையமைப்பாளர், பாடல் எழுத்தாளர் என பல திறமைகளைக் கொண்டவர். இன்று தனது 42 வது பிறந்த நாளை கொண்டாடும் யுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    Recommended Video

    #HBDYUVAN ரசிகர்களுக்கு ஆண் குரலில் ஒரு தாயாய்.. இசையுடன் தோன்றும் யுவன்.. குவியும் பிறந்தநாள் வாழ்த்து

    இவங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியுதா? வைரலாகும் பிரபல நடிகர்களின் குழந்தை பருவ புகைப்படம்!இவங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியுதா? வைரலாகும் பிரபல நடிகர்களின் குழந்தை பருவ புகைப்படம்!

    1996 ல் தனது 16 வது வயதில் சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தின் மூலம் தனது இசைப் பயணத்தை துவக்கினார் யுவன். கடந்த 23 ஆண்டு கால திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஹிப் ஹாப் இசையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை யுவனுக்கே உண்டு.

    பிரேக் கொடுத்த படங்கள்

    பிரேக் கொடுத்த படங்கள்

    துள்ளுவதோ இளமை, 7 ஜி ரெயின்போ காலனி, ராம் போன்ற படங்கள் யுவனுக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தன. தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் யுவன், 2017 ல் U 1 Records என்ற பெயரில் சொந்த இசை நிறுவனத்தை துவங்கினார். YSR films என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    குவிந்த விருதுகள்

    குவிந்த விருதுகள்

    பையா, பட்டியல் உள்ளிட்ட படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினை பெற்ற யுவன், கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார். விஜய் விருது, ஆனந்த விகடன் விருது, சைமா விருது, சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

    ஆண்டுக்கு 10 படம்

    ஆண்டுக்கு 10 படம்

    அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட படங்களுக்கு யுவன் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் சில படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. சென்னை 28, சரோஜா, மங்காத்தா, பிரியாணி, மாரி 2 ஆகிய படங்களில் பாடல்களும் எழுதி உள்ளார். ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 10 படங்களில் யுவன் பணியாற்றி வருகிறார்.

    இவரு தானா அது

    இவரு தானா அது

    மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் சம்திங் சம்திங், இரவு நிலவு, மொட்டை மாடி, வானம் நமக்கு, அஞ்சலி அஞ்சலி போன்ற பாடல்களை தந்தை இளையராஜா இசையில் பாடி உள்ளார். கிட்டதட்ட 50 க்கும் மேற்பட்ட பாடல்களை யுவன் பாடி உள்ளார். இவற்றில் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி உள்ளன.

    தயாரிப்பாளரான யுவன்

    தயாரிப்பாளரான யுவன்

    புன்னகை பூவே, சரோஜா, பில்லா 2, தில்லு முல்லு, அமீரின் ஆதிபகவான், பியார் பிரேமா காதல், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்திலும் தோன்றி உள்ளார். பியார் பிரேமா காதல், மாமனிதன் ஆகியன இவரது சொந்த தயாரிப்பில் உருவான படங்கள்.

    அஜித்திற்காக பாடல்

    அஜித்திற்காக பாடல்

    டிவி விளம்பரங்கள், இசை ஆல்பங்கள் போன்றவற்றிலும் பணியாற்றி உள்ளார் யுவன். பருத்தி வீரன், வல்லவன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, மன்மதன் உள்ளிட்ட படங்கள் யுவனை புகழின் உச்சிக்கு கொண்டு போய் விட்ட படங்களாகும். அஜித்தின் 50 வது படமான மங்காத்தா படத்தில் விளையாடு மங்காத்தா பாடலை அஜித்திற்காக தானே எழுதி, இசைத்தார். ரஜினியின் பழைய பாடல் இசையுடன் மிக்ஸ் செய்து உருவாக்கப்பட்டது இந்த பாடல்.

    மாஸ் ஹிட்டான தீனா

    மாஸ் ஹிட்டான தீனா

    யுவனுடன் கூட்டணி அமைத்து மிகப் பெரிய வெற்றி படங்களை கொடுத்த டைரக்டர்களில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர். இவர் இயக்கிய தீனா படத்திற்காக அமைக்கப்பட்ட நீ இல்லை என்றால் பாடல் மூலம் அஜித், லைலாவின் இமேஜை சர்வதேச லெவலுக்கு கொண்டு போய் விட்டார். இந்த படம் பிறகு பெங்காலியில் தேவா என்ற பெயரிலும், கன்னடத்தில் தும் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டன.

    வெங்கட் பிரபுவுடன் கூட்டணி

    வெங்கட் பிரபுவுடன் கூட்டணி

    வெங்கட் பிரபுவுடன் இணைந்து யுவன் இசையமைத்த மங்காத்தா படம், யுவனின் பிறந்தநாள் அன்றே ரிலீஸ் செய்யப்பட்டது. அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக இது அமைந்தது. அஜித்திற்காகவே இவர் எழுதி, இசையமைத்த பாடல்கள் இன்றளவும் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. யுவன் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான சென்னை 28, சரோஜா, மங்காத்தா உள்ளிட்ட படங்கள் அனைத்துமே ஹிட்டாகி உள்ளான.

    மெலடி, குத்து ஸ்பெஷல்

    மெலடி, குத்து ஸ்பெஷல்

    லிங்குசாமி, சூர்யாவை வைத்து இயக்கிய அஞ்சான் படத்தில் யுவனின் மெலடி இசையில் அமைந்த காதல் பாடல்கள் மனதை மயக்குவதாகவும், ஏக் தோ போன்ற பாடல்கள் எழுந்து ஆட்டம் போட வைப்பதாகவும் இருந்தன.

    English summary
    music composer yuvan shankar raja celebrates his 42 nd birthday today. recently he completed his 23 years in cinema carrier. he started his musical journey in the age of 16 in Aravindhan movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X