யுவன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. சன் டிவி வெளியிட்ட மாஸ் வீடியோ.. குவியும் வாழ்த்து!
சென்னை : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சர்வதேச அளவில் சிறப்பான இயக்குநராக தன்னை நிரூபித்துள்ளார்.
தன்னுடைய 14வது வயதில் தன்னுடைய இசைப்பயணத்தை அரவிந்தன் படத்தின்மூலம் துவக்கிய இவர் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தன்னுடைய இசைப்பயணத்தில் 25 ஆண்டுகளை கழித்துள்ள யுவன், இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இசையமைப்பாளர் யுவன்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தன்னுடைய 14வது வயதில் சரத்குமாரின் அரவிந்தன் படத்தில் தன்னுடைய இசைப்பயணத்தை துவங்கிய யுவன், தொடர்ந்து இடைவெளியில்லாமல் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

25வது ஆண்டு கொண்டாட்டம்
இவரது இசையில் பல கொண்டாட்டமான பாடல்களை கொடுத்துள்ளார் யுவன். தற்போது 25வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையொட்டி அடுத்தடுத்த இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

பிறந்தநாள் கொண்டாட்டம்
முன்னதாக அவரது பிறந்தநாளை எப்போதும் சிறப்பாக கொண்டாடும் ரசிகர்கள், காமன் டிபியை வெளியிட்டிருந்தனர். யுவன் முன்னணி ஹீரோஸ், முன்னணி இயக்குநர்களுடன் கைக்கோர்க்காத நிலையிலும் இந்திய அளவில் முதல் 10 முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இவர் காணப்படுகிறார். மேலும் ரசிகர்களின் இதயத்தில் இவரது இசைக்கு எப்போதுமே ஒரு சிறப்பான இடம் உண்டு.

14வது வயதில் இசைப்பயணம்
தன்னுடைய 14வது வயதில் தன்னுடைய இசைப்பயணத்தை துவங்கிய யுவன், தன்னுடைய தந்தை இளையராஜாவை போலவே முறையான இசைப்பயிற்சி எதையும் மேற்கொள்ளாமல் தனிப்பட்ட ஆர்வத்தினாலேயே சிறப்பான இசையை கொடுத்து வருகிறார். அதையும் ரசிகர்களை கவரும் வகையில் கொடுத்து வருவது அவரது சிறப்பு.

குவியும் வாழ்த்துக்கள்
இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலக பிரபலங்கள் யுவனுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் யுவனின் பிறந்தநாளையொட்டி கலக்கலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பன்முகம் காட்டும் யுவன்
தயாரிப்பாளர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் காட்டிவரும் யுவன், சமீபத்தில் தன்னுடைய தந்தை இளையராஜாவுடன் இணைந்து மாமனிதன் படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார். அவருடைய இசைப்பயணம் மேலும் சிறப்பாக தொடர இந்த பிறந்தநாளில் பிலிமிபீட் சார்பில் வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications











