யுவன் ஷங்கர் ராஜாவின் சிறுவயது பிக்ஸ்…ஆச்சரியத்தில் ரசிகர்கள் !

சென்னை : இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் சிறுவயது புகைப்படத்தை, ரசிகர்கள் பலரும் கண்டிராத நிலையில் இப்பொழுது பிரபல தமிழ் நடிகர் ஒருவர் இதனை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Recommended Video

4 முதல்வர்களுக்கு சம்பளம் கொடுத்த குடும்பம் | ALS PRODUCTION |REWIND RAJA EP-04 | FILMIBEAT TAMIL

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா இசைப் பிரியர்களின் நாடி துடிப்பாக இருந்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இளசுகளின் ஃபேவரிட் இசையமைப்பாளராக இருந்து வரும் யுவன், இதுவரை தனது சிறுவயது புகைப்படத்தை எந்த ஒரு சோசியல் மீடியாக்களில் பெரும்பாலும் வெளியிடாத நிலையில் இப்பொழுது தனது நண்பரும் நடிகருமான பிரேம்ஜி அமரன் பலரும் கண்டிராத அறிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நாடி துடிப்பாக

நாடி துடிப்பாக

இளமைத் துள்ளலான பாடல்களின் மூலம் இளசுகளை தொடர்ந்து கவர்ந்து வரும் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இளைஞர்களின் நாடி துடிப்பாக இருந்து வருகிறார்.

தனித்துவமான இசை

தனித்துவமான இசை

பிரபலமான இசைக் குடும்பத்தில் பிறந்த யுவன் ஷங்கர் ராஜா சிறுவயது முதலே இசையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இசையை முறையாகக் கற்றுக் கொண்டு இப்போது படிப்படியாக முன்னேறி முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக தனித்துவமான இசையின் மூலம் வெற்றி நடை போட்டு வருகிறார்.

பாடியும் உள்ளார்

பாடியும் உள்ளார்

அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் அதைத்தொடர்ந்து புதுப்பேட்டை, காதல் கொண்டேன், பையா, மாரி 2 என அனைத்து வயது தரப்பினரும் ரசிக்கும் படி பல்வேறு பாடல்களுக்கு இசை அமைத்துள்ள நிலையில், தனது மயக்க வைக்கும் குரலின் மூலம் பல பாடல்களைப் பாடியும் உள்ளார்.

கண்டிருக்க வாய்ப்பில்லை

கண்டிருக்க வாய்ப்பில்லை

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இளைஞர்களுக்கு பிடித்தது போல் தொடர்ந்து பாடல்களுக்கு இசையமைத்து வரும் நிலையில், இவரின் சிறுவயது புகைப்படத்தை பலரும் கண்டிருக்க வாய்ப்பில்லை.

அரிய புகைப்படம்

அரிய புகைப்படம்

இந்நிலையில் பிரபல நடிகரும், இயக்குனர் கங்கை அமரனின் மகனுமாகிய பிரேம்ஜி அமரன் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு மிக நெருங்கிய உறவு ஆவார். மேலும் சிறு வயது முதலே யுவன் சங்கர் ராஜாவும் பிரேம்ஜியும் நண்பர்களாக பழகி வரும் நிலையில் இப்பொழுது பிரேம்ஜி சோசியல் மீடியாவில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சிறு வயதில் எடுத்த அரிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அதே வரிசையில் நின்று

அதே வரிசையில் நின்று

இவ்வாறு வெளியிடப்பட்ட முதல் புகைப்படம் 1984ல் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த புகைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், ஹரி கிருஷ்ணன் என மூவரும் துறுதுறுப்புடன் மிகவும் குட்டி பசங்களாக பால்கனியில் நின்றவாறு எடுத்த புகைப்படத்தை ரீ கிரியேட் செய்யும் வகையில் அதே வரிசையில் அதே போஸில் மீண்டும் மூவரும் நின்று எடுத்த புகைப்படத்தை சிறுவயது புகைப்படத்தோடு இணைத்து பிரேம்ஜி வெளியிட்டுள்ளார்.

ரீ கிரியேட்

ரீ கிரியேட்

சிறிது நேர இடைவேளையில் மற்றொரு சிறு வயது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள பிரேம்ஜி அந்த புகைப்படம் 1993ல் கொஞ்சம் வளர்ந்த டீனேஜ் பசங்களாக பிரேம்ஜி, யுவன் ஷங்கர் ராஜா, ஹரி கிருஷ்ணன் என அதே மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இப்பொழுது இருக்கும் லுக்கில் ரீ கிரியேட் செய்து பிரேம்ஜி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

க்யூட்டான

க்யூட்டான

யுவன் சங்கர் ராஜாவின் இந்த சிறுவயது புகைப்படத்தை பெரும்பாலும் ரசிகர்கள் பலரும் கண்டிராத நிலையில், இந்த அறிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் இந்த க்யூட்டான புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X