நான் இன்னும் என்னோட பெஸ்ட் லவ் சாங்கை செய்யலை.. என்ன யுவன் இப்படி சொல்லிட்டாரு!
சென்னை : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தொடர்ந்து அடுத்தடுத்த பெஸ்ட் படங்களில் கமிட்டாகி சிறப்பான பாடல்களை கொடுத்து வருகிறார்.
அடுத்தடுத்த இசைக் கச்சேரிகளிலும் ரசிகர்களை சந்தித்து சிறப்பான பாடல்களை கொடுத்து வருகிறார் யுவன்.
தன்னுடைய சூப்பர் வாய்சில் பவ காதல் பாடல்களை கொடுத்துவரும் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளராகவும் தன்னை நிரூபித்து வருகிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா
இசைஞானி இளையராஜாவின் மகனாக இருந்தபோதிலும் இசையமைப்பில் தன்னுடைய தனித்துவமான பாடல்கள் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் யுவன் சங்கர் ராஜா. யுவனின் பல பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து, அவர்களை தொடர்ந்து கட்டிப் போட்டு வருகின்றன. நீண்ட காலங்களாக யுவன், தன்னுடைய பாடல்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சிறப்பான மெலடி பாடல்கள்
பல படங்களில் தன்னுடைய வாய்சில் மட்டுமில்லாமல் மற்ற பாடகர்களையும் கொண்டு சிறப்பான பல பாடல்களை கொடுத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இவரது மெலடி பாடல்கள், குத்துப் பாடல்கள் என பல ஜானர்களில் வெளியாகும் பாடல்களால் ரசிகர்கள் கட்டுண்டு கிடக்கின்றனர். தற்போது இறைவன் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி இசையமைத்து வருகிறார் யுவன்.

யுவனின் இசைக் கச்சேரிகள்
பல வெற்றிப் படங்கள் மற்றும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய தனித்துவமான பாடல்களை கொடுத்து வருவதுடன், இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் இசைக் கச்சேரியை நடத்தினார் யுவன்.

டேட் வித் யுவன் இசைக் கச்சேரி
தொடர்ந்து இசை ஆல்பங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறார். இதனிடையே நாளை திருச்சியில் யுவனின் இசைக் கச்சேரி டேட் வித் யுவன் என்ற பெயரில் நாளை நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களை பாட யுவன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

பெஸ்ட் காதல் பாடலை செய்யவில்லை
ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான யுவனின் பாடல்களை கமெண்ட் செய்ய யுவன் கேட்டுள்ளார். இதனிடையே இந்த வீடியோவில், யுவன் இசையில் அவருக்கு பிடித்தமான காதல் பாடல் எது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இதுவரை தான் தனக்கு பிடித்தமான காதல் பாடலை உருவாக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











