Music director Yuvan: துபாயில் செட்டில் ஆன யுவன் சங்கர் ராஜா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: தமிழ் உள்ளிட்ட படங்களில் இசையமைத்து பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் யுவன் சங்கர் ராஜா.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் என்ற அடையாளம் இருந்தும் தன்னுடைய தனித்துவமான இசையால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார் யுவன்.

Music composer Yuvan shankar raja settled in Dubai it seems

பிரபல நடிகர்களின் படங்களில் தொடர்ந்து இசையமைத்துவரும் யுவன் அடுத்ததாக விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிவரும் தளபதி 68 படத்திலும் இசையமைத்து வருகிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா: தன்னுடைய பிரத்யேகமான இசையால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருபவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு இருந்தபோதிலும் தன்னுடைய தனித்துவமான இசையால் ரசிகர்களை தூங்கவிடாமல் மற்றும் சிறப்பான தூக்கத்தை தரும் இருவேறு வித்தைகளையும் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினருக்கும் இசை அடையாளமாக திகழ்ந்து வருகிறார் யுவன்.

தனிப்பட்ட அடையாளம்: இளையராஜாவை தொடர்ந்து அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் தன்னுடைய பாடல்கள்மூலம் தூங்காத இரவுகளை கழித்துவரும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய துணையாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் காதலை மையமாக கொண்ட பல பாடல்களின்மூலம் அதிகமான ஹிட் நம்பர்களை கொடுத்து வருகிறார் யுவன். தன்னுடைய பாடல்கள் மற்றும் பிஜிஎம்மால் படங்களுக்கு சிறப்பாக உயிர் கொடுத்து வருகிறார் யுவன்.

தளபதி 68 படத்திற்கு இசையமைக்கும் யுவன்: படங்களில் இசையமைப்பது மட்டுமில்லாமல் கச்சேரிகள் மூலமாகவும் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் யுவன். பல ஆண்டுகளை கடந்து சமீபத்தில் இவரது இசைக் கச்சேரி சென்னையில் நடைபெற்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்தது. பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா, தற்போது விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிவரும் தளபதி 68 படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

துபாயில் செட்டில் ஆன யுவன்?: இந்தப் படத்தின் இசைக்காக விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் யுவன் ரசிகர்களும் அதீத ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா தற்போது குடும்பத்துடன் துபாயில் குடியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கேயே அதி நவீன் ஒலிப்பதிவு கூடத்தையும் அவர் அமைத்துள்ளதாகவும் அங்கு பாடல் பதிவு, பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் அவர் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் கேள்வி: அடுத்தடுத்த படங்களுக்காக தன்னை சந்திக்க கேட்பவர்களையும் துபாயில் வரவழைத்து அவர் சந்தித்து வருவதாகவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. நந்தா, கற்றது தமிழ் உள்ளிட்ட தன்னுடைய ஆரம்ப கால படங்களிலேயே அதிகமான ரசிகர்களை கட்டிப் போட்டவர் யுவன் சங்கர் ராஜா. காதல் தோல்வி, ஒருதலை காதல், நம்பிக்கை பாடல்கள், தாலாட்டு என அனைத்து அம்சங்களையும் தன்னுடைய பாடல்கள்மூலம் சிறப்பான வெளிப்படுத்தியவர் யுவன் சங்கர் ராஜா. அவர் தற்போது துபாயில் குடியேறியுள்ளதாக கூறப்படுவது ரசிகர்களிடையே கேள்விகளை உண்டு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X