Yuvan Shankar Raja: அஜித் விரைவில் உடல்நலன் தேற வேண்டும்.. பிரபலங்கள் வேண்டுதல்!

சென்னை: நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட, சூட்டிங் மீண்டும் அசர்பைஜானிலேயே துவங்கவுள்ளது. வரும் 15ம் தேதி வாக்கில் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் அஜித் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தன்னுடைய பிட்னசில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருபவர் அஜித். உலகளவில் தன்னுடைய பைக் டூரையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அசர்பைஜானுக்கு இன்னும் சில தினங்களில் விடாமுயற்சி சூட்டிங்கிற்காக அஜித் புறப்படவிருந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

Music composer Yuvan shankar raja wished Ajith for speedy recovery

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் அவர் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் மே மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் வரும் 15ஆம் தேதி மீண்டும் அசர்பைஜானிலேயே நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அசர்பைஜானில் காலச்சூழல் ஒத்துழைக்காத நிலையில் படத்தின் ஷூட்டிங்கை பாதியிலேயே முடித்துக் கொண்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

விடாமுயற்சி படத்தின் சூட்டிங்: இந்நிலையில் தற்போது மீண்டும் அசர்பைஜானிலேயே படத்தின் சூட்டிங்கை மகிழ்ந்திருமேனி திட்டமிட்டுள்ளார். இதனிடையே இன்னும் சில தினங்களில் அசர்பைஜான் செல்ல அஜித் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கமான தனது உடல் பரிசோதனைக்காக அப்போலோ சென்றிருந்த அஜித்திற்கு காதின் கீழ் பகுதியில் உள்ள நரம்பில் வீக்கம் இருப்பதாகவும் சிறிய அளவிலான ஆபரேஷன் மூலம் இதை சரி செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித்திற்கு அறுவை சிகிச்சை: இதையடுத்து தற்போது அஜித் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் அவர் வீடு திரும்ப உள்ளதாகவும் அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் மூலம் தகவல் வெளியிட்டுள்ளார். இதனிடையே அஜித்தின் உடல்நலன் விரைவில் தேற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தன்னுடைய twitter பக்கத்தில் அஜித் குமார் விரைவில் நலம் பெற தான் பிரார்த்தனை மேற்கொள்வதற்காக தெரிவித்துள்ளார். இதே போல நடிகை சிம்ரனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித் குமாருடன் தான் பணியாற்றிய படங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

Music composer Yuvan shankar raja wished Ajith for speedy recovery

பிரபலங்கள் வேண்டுதல்: நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியும் அஜித்குமார் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் அஜித் கடந்து வந்த கடினங்கள் அதிகம் என்றும் தற்போது வென்று நின்றுள்ளதாகவும் இனியும் எத்தனை கடினங்கள் வந்தாலும் வெல்வார் என்றும் உடல்நலம் பெற்று திரும்ப தன்னுடைய வேண்டுதல்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே நடிகை பார்வதி மற்றும் நஸ்ரியா நாசீம் உள்ளிட்டவர்களும் அஜித்தின் உடல் நலன் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். அஜித்தின் உடல் நலன் விரைவில் குணம் பெற அவரது ரசிகர்களும் பிரார்த்தனைகள் மேற்கொண்டதை பார்க்க முடிந்தது, தொடர்ந்து அஜித்குமார் ட்விட்டரில் ட்ரெண்டிங்கிலேயே உள்ளார்,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X