twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "இசையை அழிக்க வந்த சுனாமி நான்" இசை சுனாமி பிரேம்ஜியின் தன்னிலை விளக்கம்!

    தனக்கு எப்படி இசை சுனாமி பட்டம் வழங்கப்பட்டது என்பது பற்றி நடிகர் பிரேம்ஜி விளக்கமளித்துள்ளார்.

    |

    Recommended Video

    இசையை அழிக்க வந்த சுனாமி நான்'....பிரேம்ஜி- வீடியோ

    சென்னை: இசை சுனாமி பட்டம் தனக்கு எப்படி வந்தது என்பது குறித்து, இசையமைப்பாளரும் நடிகருமான பிரேம்ஜி விளக்கமளித்துள்ளார்.
    பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார்.

    பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் சரவண ராஜன் இயக்கியுள்ளார்.
    வெங்கட்பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய பிரேம்ஜி, தனக்கு எப்படி இசை சுனாமி பட்டம் வந்தது என்பது குறித்து விளக்கமளித்தார்.

    Music director and actor Premji on tittle Isai Tsunami

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, " பொதுவாக இசையமைப்பாளர்களுக்கு இசைப்புயல், இசைத்தென்றல் என காலநிலையை தொடர்புப்படுத்தியே பட்டம் வைப்பார்கள். அதுபோல் எனக்கு இசை சுனாமி, அதாவது இசைக்கு வந்த பேரழிவு போல இருக்கட்டுமே என அச்சமின்றி பட தலைப்பில் போடுமாறு இயக்குனர் ராஜபாண்டி சாரிடம் கேட்டேன். ஆனால் அவர், நீங்கள் நன்றாக தானே இசையமைக்கிறீர்கள் எனக் கூறி, இசை இளவல் என பட்டம் கொடுத்தார்.

    அதன் பின்னர் எனது அண்ணன் யுவன், இசை சுனாமி என என்னை அழைத்தார். சரி அதுவே இருந்துவிட்டு போகட்டுமே என ஆர்.கே.நகர் டைட்டிலிலும் இசை சுனாமி என போட சொல்லிவிட்டேன்.
    மற்றதை எல்லாம் நைட் கட்டிங் போட்டுட்டு பேசலாம்."

    இவ்வாறு அவர் பேசினார்.

    English summary
    While speaking R.K.Nagar movie trailer launch, actor and music director Premji has explained how he got the 'Isai Tsunami' title.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X