விஜய்யின் ’புலி உறுமுது’ பாடலின் சரணத்தை நான்தான் எழுதினேன்.. விஜய் ஆண்டனி சுவாரஸ்யம்!
சென்னை: நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு தளங்களில் பயணித்து வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் ரிலீசாக இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். ப்ரோமோஷன்களில் விஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டன் இருவரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி பல்வேறு பேட்டிகளையும் அவர்கள் கொடுத்து வருகின்றனர்.

நடிகர் விஜய் ஆண்டனி: நடிகர் விஜய் ஆண்டனி -இயக்குனர் விஜய் மில்டன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் மழை பிடிக்காத மனிதன்/ வித்தியாசமான தலைப்புடன் ரசிகர்களை சந்திக்கவுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் விஜய் மில்டன் இருவரும் இணைந்து அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இசையமைப்பாளராக ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் விஜய் ஆண்டனி. ஒரு கட்டத்தில் நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
விஜய் குறித்து விஜய் ஆண்டனி சுவாரஸ்யம்: இந்நிலையில் நடிகர் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தின் புலி உறுமுது சாங் குறித்த சுவாரஸ்யம் ஒன்றை தற்போது விஜய் ஆண்டனி தன்னுடைய பேட்டியில் பகிர்ந்துள்ளார். இந்த பாடல் மிகவும் விறுவிறுப்பாக ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்ட பாடல். விஜய் கேரியரில் பெஸ்டான பாடலாகவும் அமைந்தது. ரசிகர்கள் இடையே சிலிர்ப்பை ஏற்படுத்திய இந்த பாடலுக்கு முன்னதாக ஒரு சரணம் இடம்பெறும். சமஸ்கிருதத்தில் இந்த சரணம் இடம்பெறும். இந்நிலையில் இந்த பாடல் குறித்து பேசியுள்ள விஜய் ஆண்டனி, இந்த பாடலுக்கு முன்னால் வரும் சரணத்தை தானே எழுதியதாக தெரிவித்துள்ளார்.
புலி உறுமுது பாடல்: இந்த வரிகள் மந்திரம் போல இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாகவும் அதையொட்டியே இதன் வரிகள் அமையும்படி தான் எழுதியதாகவும் விஜய் ஆண்டனி மேலும் தெரிவித்துள்ளார். தற்போது நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பாடகராகவும் பல்வேறு தளங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் விஜய் ஆண்டனி, பாடலாசிரியராகவும் இருந்துள்ளது தற்போது இந்த பேட்டியின் மூலம் வெளிப்பட்டுள்ளது. மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய் ஆண்டனியுடன் மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
மழை பிடிக்காத மனிதன் படம்: படத்திற்கு அச்சு ராஜா மணி மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர். விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2 படத்திற்கு பிறகு வெளியான கொலை, ரத்தம், ரோமியோ ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை கவராத நிலையில் தற்போது மழை பிடிக்காத மனிதன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கோலி சோடா 2 படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications